உள்ளூர் செய்திகள்

"புரோட்டா உணவால் இதயம் பாதிக்குமா?

புரோட்டாவை, மாவாக பிசைவது முதல், கல்லில் சுடுவது வரை, எண்ணெயே அதிக பங்கு வகிக்கிறது. எனவே புரோட்டா, இதயத்திற்கு மிகவும் கெடுதலானது. புரோட்டாவை தவிர்த்து விட்டு, எண்ணெய் இல்லாத சப்பாத்தி, எண்ணெய் இல்லாத தோசை அல்லது இட்லி, இடியாப்பம் உண்பது நல்லது.1. எனக்கு, நான்கு ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. மூன்று வகை மாத்திரைகள் எடுத்து வருகிறேன். சமீப காலமாக எனக்கு வியர்வை அதிகமாக உள்ளது. இது எதனால்?- எஸ். காந்திமதிநாதன், மதுரைசர்க்கரை நோய் உள்ளவருக்கு, வியர்வை அதிகமாக, பல காரணங்கள் உள்ளன. இதில் மிக முக்கியமானது, ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைவதே. சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது மிகவும் ஆபத்தானது. இது, பல்வேறு வழிகளில் இதயத்தையும் பாதிக்கும். சர்க்கரை நோய் உள்ளவருக்கு, இதய நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். எனவே, உடனே நீங்கள் இதய டாக்டரை சந்தித்து ரத்தத்தில், சர்க்கரை அளவு, எக்கோ பரிசோதனை, 'டிரெட்மில்' பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதில் ஏதேனும் கோளாறு இருந்தால், அதற்கு ஏற்ப சிகிச்சை அமையும்.2. சமீபத்தில் எனக்கு, 'பைபாஸ் சர்ஜரி' செய்யப்பட்டது. நான் மற்றவர்களைப் போல, எப்போது தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடலாம்?- பி. குமார், தேனிபைபாஸ் சர்ஜரி சிகிச்சை என்பது, இதய ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பை, நெஞ்சில் இருந்தோ, கை, கால்களில் உள்ள ரத்த நாளத்தை எடுத்தோ, இதய ரத்த நாளத்தில் பொருத்தி, சரி செய்யும் ஆப்பரேஷன். பொதுவாக, ஆப்பரேஷன் முடிந்த மூன்று மாதங்கள் கழித்து, ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்-ரே, எக்கோ மற்றும் டிரெட்மில் பரிசோதனை செய்யப்படும். இவற்றின் முடிவுகள் அனைத்தும், நார்மலாக இருந்தால் நீங்கள் இயல்பான வாழ்க்கைக்கு எளிதில் வந்து விடலாம். தாம்பத்ய வாழ்க்கையையும் துவக்கி விடலாம்.3. எனக்கு, இரண்டு ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு உள்ளது. இதற்கு, 'Telmisartan' என்ற மருந்து எடுத்து வருகிறேன். இம்முறை டாக்டரிடம் சென்றபோது அவர் எனக்கு, 'Olmesartan' என்ற மாத்திரையை தந்தார். இதை நான் தொடர்ந்து எடுக்கலாமா?- எஸ். சரவணகுமார், ஸ்ரீவில்லிப்புத்தூர்'Telmisartan' மற்றும் 'Olmesartan' ஆகிய இரண்டு மாத்திரைகளுமே A R B என்ற மருந்து வகையைச் சேர்ந்தவை. இவை, ரத்தக் கொதிப்பை நன்கு குறைப்பதுடன், பக்க விளைவுகளும் இன்றி உள்ளன. 'Olmesartan' மருந்து 'Telmisartan' மருந்தை விட, ரத்தக் கொதிப்பை நன்கு கட்டுப்படுத்தும். இம்மருந்தை தொடர்ந்து எடுப்பதால், எந்த பாதிப்பும் இல்லை.4. என், 27 வயது மகன், வியாபார ரீதியாக அடிக்கடி வெளியூர் செல்வதால், வாரத்தில் 5 நாட்கள், இரவில் புரோட்டாவையே உணவாக சாப்பிடுகிறான். இதனால் எதுவும் பாதிப்பு வருமா?- எஸ். நாராயணசாமி, ராமநாதபுரம்நம் இந்தியருக்கு, பிற நாட்டவரை விட, 15 ஆண்டுகள் முன்பே, மாரடைப்பு வருகிறது என்பது, அசைக்க முடியாத உண்மை. எனவே, சிறு வயது முதலே, எண்ணெய் பலகாரங்களை தவிர்ப்பது, சிறந்த உணவுப் பழக்கம். புரோட்டாவை பொறுத்தவரை, அதை மாவாக பிசைவது முதல், கல்லில் சுடுவது வரை, எண்ணெயே அதிக பங்கு வகிக்கிறது. எனவே புரோட்டா, இதயத்திற்கு மிகவும் கெடுதலானது. எனவே, புரோட்டாவை தவிர்த்து விட்டு, எண்ணெய் இல்லாத சப்பாத்தி, எண்ணெய் இல்லாத தோசை அல்லது இட்லி, இடியாப்பம் உண்பது நல்லது.டாக்டர் விவேக்போஸ், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !