உள்ளூர் செய்திகள்

"புகையிலையால் சி.ஓ.பி.டி., பாதிப்பு வருமா

என் நண்பனுக்கு நுரையீரலில் நெறிக்கட்டி உள்ளது. அவரை பரிசோதித்த டாக்டர், E.B.U.S., பரிசோதனை செய்யும்படி கூறினார். E.B.U.S., என்றால் என்ன?Endo Bronchial Ultra Sound என்பதன் சுருக்கமாகும். இது ஒரு நவீன கருவி. நுரையீரலை உள்நோக்குவதற்கு பிராங்கோஸ்கோப் பயன்படுத்தப்படுகிறது. இதன் நுனிப்பகுதியில் அல்ட்ரா சவுண்ட் கருவி பொருத்தப்பட்டு இருப்பதையே எண்டோ பிராஞ்சியல் அல்ட்ராசவுண்ட் என்கிறோம். இந்த நவீன கருவியை நுரையீரலுக்குள் செலுத்தி, உள்ளிருக்கும் நெறிக்கட்டியை துல்லியமாக அருகில் சென்று, அதன் ஒரு சிறுபகுதியை எடுத்து வரமுடியும். இக்கருவியில் இருக்கும் அல்ட்ரா சவுண்ட் கருவியின் உதவியால், நெறிக்கட்டிக்கு அருகில் இருக்கும் ரத்தக்குழாய் மற்றும் நுரையீரல் பகுதியை தவிர்த்து, நெறிக்கட்டியினை மட்டுமே எடுத்து வரமுடியும். இக்கருவி நுரையீரல் மருத்துவத்தில் ஒரு புதிய பரிமாணத்தையே ஏற்படுத்தியுள்ளது. உங்கள் நண்பரை உடனடியாக இப்பரிசோதனையை செய்யச் சொல்லுங்கள்.புகையிலையை வாயில் போட்டு சுவைக்கும் என் தாயாருக்கு, சி.ஓ.பி.டி., நோய் பாதிப்புள்ளதாக, டாக்டர் கூறுகிறார். அவருக்கு 3 மாதமாக மூச்சுத் திணறல் உள்ளது. சிகரெட் புகைப்பவர்களுக்கு வரும் இந்நோய், தாயாருக்கு வந்ததேன்?புகையிலையை எந்த வகையில் பயன்படுத்தினாலும் சி.ஓ.பி.டி., வர வாய்ப்புள்ளது. புகையிலை, பாக்கு, குட்காவை வாயில் வைத்து சுவைப்பது மிக தவறு. சிலர் இதற்கு அடிமையாகி விடுகின்றனர். புகையிலையை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது. மேலும் அடுப்பு புகை, குப்பையை எரிப்பதன் மூலம் வரும் புகை, சிகரெட் புகைப்பவர் விடும் புகை போன்ற எல்லாவித புகைகளாலும் சி.ஓ.பி.டி., வர வாய்ப்புள்ளது. உங்கள் தாயாரை, உடனடியாக புகையிலை பழக்கத்தை நிறுத்தும்படி கூறுங்கள். சி.ஓ.பி.டி.,யால் வரும் மூச்சுத் திணறலை தவிர்க்க, அவருக்கு ஏற்ற இன்ஹேலரை பயன்படுத்துவது நல்லது.- டாக்டர் எம்.பழனியப்பன்,மதுரை. 94425-24147


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்