உள்ளூர் செய்திகள்

சிகரெட் குடிக்குமிடத்தில் நிற்பது கூட நுரையீரலை பாதிக்கும்

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 நபர்களில் மூன்று பேர், வாழ்நாளில் புகையிலையை தொடாதவர்களாக இருக்கின்றனர். புற சூழல்களாலும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம் என்கிறார், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, நுரையீரல் சிறப்பு பிரிவு டாக்டர் பிரகாசம்.நுரையீரலின் ஆரோக்கியத்தை அறிவது எப்படி?மாசற்ற காற்றை சுவாசிப்பது, மூச்சுபயிற்சி, யோகா செய்வது போன்றவற்றால், நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.காற்றில் உள்ள துாசி, சிமென்ட், கட்டுமான கழிவுகள், வாகன புகை, தொழிற்சாலை புகை ஆகியவை நேரடியாக நுரையீரலுக்குள் நுழைகிறது. ரத்த நாளங்களுக்குள் இவை சென்று, மாரடைப்பு, நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. அதிக காற்று மாசு கொண்ட இடங்களுக்கு செல்லும் போது, முக கவசம் அணிவது அவசியம்.சாதாரண சளி, இருமலில் தொடங்கி, காற்று மூலம் பரவக்கூடிய வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகள் நுரையீரலை பாதிக்கிறது. அதீதமாக நுரையீரல் பாதிக்கப்படும் போது, மூச்சு வாங்குவது, மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவது, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.மூச்சு விட சிரமப்படுவோர் எந்த நிலையில் டாக்டரை அணுகுவது அவசியம்?தரையில் 100 அடி நடந்தாலே மூச்சு வாங்குதல், உட்காரும் போது அதிகமாக மூச்சு இழுத்து விடுதல் போன்றவை தீவிர பாதிப்புக்கான அறிகுறிகள். மற்றபடி மாடிப்படி ஏறும் போது, நீண்டதுாரம் நடக்கும் போது ஏற்படும் மூச்சிரைப்பு சாதாரணமானது தான். சிறிது நேரத்தில் நுரையீரல் பழைய நிலைக்கு மாறிவிடும்.வழக்கத்துக்கு மாறாக மூச்சு சார்ந்த பாதிப்புகள் இருத்தல், இரு வாரங்களுக்கு மேல் தொடர் இருமல், எடை குறைவு, மாலையில் காய்ச்சல், ரத்தத்துடன் சளி வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், பரிசோதனைகள் செய்வது அவசியம்.கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் நுரையீரல் செயல்பாடு பற்றி…கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள், இரு ஆண்டுக்கு ஒருமுறை நுரையீரலின் செயல்பாடு குறித்து பரிசோதித்து கொள்வது நல்லது.புகைப்பிடிக்காதவர்களுக்கும் புற்றுநோய் வர காரணம் என்ன?பொது இடங்களில், புகைப்பிடிக்கும் பகுதி பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு, நிறைய பேர், நாள்தோறும் விடும் புகையில் இருந்து வெளியேறும் நச்சுகள், கெமிக்கல், திட, திரவ பொருட்கள் அப்பகுதி காற்றில் சுற்றி கொண்டிருக்கும்.அங்கு அடிக்கடி செல்வோர், அங்கு வேலை செய்வோருக்கு, எளிதில் அப்புகை நுரையீரலை தாக்கும். புகைப்பிடிப்பவர்களுக்கு அருகில் எப்போதும் இருப்பவர்களுக்கும் இப்பாதிப்பு ஏற்படலாம்.அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் தரவுகள்படி, கடந்த சில ஆண்டுகளில், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 நபர்கள் மூன்று பேர் வாழ்நாளில் புகையிலையை தொடாதவர்களாக இருக்கின்றனர்.- டாக்டர் கி.பிரகாசம்,உதவி பேராசிரியர்அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரி, தொடர்புக்கு: stanprakasam18@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !