உள்ளூர் செய்திகள்

ஒற்றை தலைவலியை தூண்டும் காரணிகள்

ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கும் 'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலி, உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய நரம்பியல் தொடர்பான நோய். தலையின் ஒருபக்கமாக ஏற்படும் வலியானது, 4 - 72 மணி நேரம் நீடிக்கும். இதன் முக்கியமான அறிகுறிகள் குமட்டல், வாந்தி, அதிக வெளிச்சம், சத்தத்தால் வலி அதிகரிப்பது, இருளில் அமைதியான சூழலில் இருக்க வேண்டும் என்ற உணர்வு போன்றவை.பிம்பங்களின் நடுவில் கரும் புள்ளிகள், பிரகாசமான ஒளி தெரிவது, தோள்பட்டையில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு, செயல்பாடுகள், பேச்சில் தடுமாற்றம்,வாசனை உணர முடியாதது போன்றவை, தலைவலி வருவதற்கு முன், எச்சரிக்கை அறிகுறிகளாக, 15 நிமிடங்களில் துவங்கி ஒரு மணி நேரம் வரை நீடிக்கலாம்.மூளையில் சுரக்கும் 'செரட்டோனின்' என்ற வேதிப்பொருளில் ஏற்படும் மாறுபாடுகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மன அழுத்தம், துாக்கமின்மை, நீண்ட பயணங்கள், பால் பொருட்கள், காற்று மாசு, கருத்தடை, துாக்க மாத்திரைகள் உட்பட பல காரணிகள் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தலாம். என்ன காரணம் என்பதை கண்டறிந்து, அதைத் தவிர்த்து, டாக்டரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்தால், ஒற்றைத் தலைவலி வராமல் கட்டுப்படுத்த முடியும்.டாக்டர் எல். கண்ணன்,ஹோமியோபதி மருத்துவர், சென்னை. 94443 01226


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !