உள்ளூர் செய்திகள்

ஆரோக்கியத்திற்கு ஐந்து எஸ்கள்!

ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க, அதனுடன் தொடர்புடைய ஐந்து, 'எஸ்'களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.'எஸ் 1' - சர்க்கரைசர்க்கரையில், குறிப்பாக வெள்ளைச் சர்க்கரையை, முற்றிலும் தவிர்க்க வேண்டியது அவசியம்.'எஸ் 2' - சிகரெட்புகை பிடிக்கவே கூடாது. அந்த பழக்கம் இருப்பவர்கள், முற்றிலும் அதிலிருந்து மீள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.'எஸ் 3' - 'சால்ட்' எனப்படும் உப்புஎவ்வளவு குறைவாக பயன்படுத்த முடியுமோ, அந்த அளவு குறைவாக உப்பை பயன்படுத்த வேண்டும்.'எஸ் 4' - 'ஸ்மைல்' என்ற புன்னகைஎப்போதும் அமைதியான மனநிலையில், எல்லாவற்றையும் புன்னகையுடன் எதிர்கொள்ள பழக வேண்டும்.'எஸ் 5' - 'ஸ்லீப்' அதாவது துாக்கம்தனி நபரின் தேவையை பொறுத்து, 6 - 8 மணி நேரம் வரை, ஆழ்ந்த துாக்கம் மிகவும் அவசியம்.இந்த ஐந்து எஸ்களை பின்பற்றினால், ரத்த சர்க்கரை நம் கட்டுக்குள் இருக்கும்.டாக்டர் வி.மோகன்,சர்க்கரை கோளாறு சிறப்பு மருத்துவர்,சென்னை.044 - 7164 5617


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !