பொடுகுப்பிரச்னை இருந்தால் இதை பின்பற்றலாம்
* கைப்பிடி அளவு வேப்பங் கொழுந்தை, நன்றாகக் கழுவி, விழுதாக அரைத்து, தலையில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பின், ஒரு பக்கெட் நீரில், இரண்டு எலுமிச்சம் பழச் சாறைப் பிழிந்து தலைக்கு குளிக்கலாம்.* தலையில் எண்ணெய் பசையுடன் பொடுகுத் தொல்லையும் இருந்தால், முடி உதிர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த பிரச்னைக்கு தீர்வு, தலையில் தயிர் அல்லது மோரை தேய்த்து, 15 நிமிடங்கள் ஊற வைத்து குளிக்கலாம்.* மஞ்சள் துாளை தண்ணீர் அல்லது ஷாம்புவுடன் கலந்து தலையில் தேய்த்து, 15 நிமிடங்கள் ஊற வைத்து குளிக்கலாம்.* அருகம்புல் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து, மணல் போன்று வருமாறு நன்றாகக் காய்ச்சி, வெயிலில் இரண்டு நாட்கள், ஒருநாளில் இரண்டு மணி நேரம் வைத்து, இந்த எண்ணெயை தேய்த்துக் குளிக்கலாம்.