உள்ளூர் செய்திகள்

கால்சியம் குறைபாட்டை நீக்கும் உணவுகள்!

என்னிடம் வருபவர்களிடம், எலும்பு தொடர்பான மூன்று பிரச்னைகளை அதிகமாக பார்க்கிறேன். குறிப்பாக, சைவ உணவு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களிடம்!கால்சியம், 'வைட்டமின் - டி மற்றும் வைட்டமின் - பி 12' குறைபாடு உள்ளவர்கள், தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய, எளிதாக கிடைக்கும் சில உணவுகளை இவர்களுக்கு சிபாரிசு செய்கிறேன்...கால்சியம் குறைபாடு உள்ளவர்கள்...கேழ்வரகு, கீரை வகைகள், தயிர், வெந்தய இலைகள், முளை கட்டிய பச்சைப் பயறு, நிலக்கடலை, ராஜ்மா, பனீர், பால், எள், ஆரஞ்சு, வெண்டைக்காய், முருங்கைக் காய், பாதாம், சோயா.வைட்டமின் - டி குறைபாட்டிற்கு...தயிர், பாலாடை, வெண்ணெய், சோயா பால், காளான்.தினமும் அரை மணி நேரம், இளம் வெயிலில் இருக்க வேண்டும்.வைட்டமின் - பி 12 குறைபாட்டிற்கு...பால், தயிர், பனீர், ஆப்பிள், வாழைப்பழம், காளான், பீட்ரூட், உருளைக் கிழங்கு, காபூலி சென்னா, கீரை வகைகள்.இவையெல்லாம் எளிதாக கிடைக்கும். இவற்றில், ஒன்றுக்கும் மேற்பட்டவை நாம் வாழும் பகுதியிலேயே விளையக் கூடியவை; அவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டாலே நல்ல பலன் கிடைக்கும்.-டாக்டர் அனில் பட், எலும்பியல் மருத்துவர், மும்பை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !