உள்ளூர் செய்திகள்

சளியை விரட்ட இஞ்சி

மழைக்காலம் துவங்கியாச்சு..! இனி குழந்தைகளின் ஐஸ்கிரீம் ஆசைக்கு தடை தான். காரணம், மழைக்காலம் என்றாலே குழந்தைகளுக்கு சளி பிரச்னைகள் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில், இஞ்சி சாறு குழந்தைகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்.இரண்டு அங்குல நீளம் உள்ள இஞ்சியை தோலை நீக்கி, கழுவி, ஆறிய நீர் விட்டு அரைக்கவும். பட்டு போல் இல்லாமல் மிக்சியில், இரண்டு முன்று சுற்று சுற்றினால் போதும். இதை வடிக்கட்டியதும், சாற்றில் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.அதிக காரம் நாக்கில் ஏறாமல் இருக்க, பரிசோதனைக்கு பின் தரலாம். முன்று நாட்களுக்கு தொடர்ந்து, சிறிதளவு கொடுத்து வந்தால், சளித்தொல்லை பிரச்னை அறவே இருக்காது. இரண்டு வயதிலிருந்து உள்ள பிள்ளைகளுக்கு இரண்டு ஸ்பூன் அளவுக்கு கொடுக்கலாம்.இஞ்சி சாறில், தேன் கலந்து சாப்பிடுவது, உடல் நலனுக்கு நல்லது. இல்லையேல், சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு அல்லாமல் பொதுவாக, சளித்தொல்லையால் அவதிப்படுவோர், உணவில் மிளகை சேர்த்துக் கொள்ளலாம். ஒரு டம்ளர் பாலை காய்ச்சி, அதில் முன்று இதழ் குங்குமப்பூ சேர்த்து பருகலாம்.இஞ்சி ரசம், வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். மிளகு பால் காய்ச்சி சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு, இரவில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !