உள்ளூர் செய்திகள்

அவரையால் எல்லாம் முடியும்!

நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் காய்கறிகள் பலவற்றின் மருத்துவ குணங்கள், நமக்கு தெரிவதில்லை. வீட்டுத்தோட்டங்களிலும், தனிப்பயிராகவும், மற்ற பயிர்களுக்கு இடையே ஊடுபயிராகவும் வளர்க்கப்படுவது அவரை. இதன் காய், இலைகளின் மூலம், ஏராளமான மருத்துவப் பயன்களை அடைய முடியும்.வெட்கை பாதிப்பு ஏற்பட்டால், அவரை இலையை அரைத்து பத்து போடுவது கிராமப்புறங்களில் வழக்கம். அடுத்தடுத்த நாட்கள் தொடர்ந்து பத்து போடும்போது, வெட்கை கொப்புளத்தின் வேர் அறுத்து, மீண்டும் வராமல் தடுத்து விடும் குணம் அவரை இலை சாறுக்கு உண்டு. அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை இருக்கும்; இது, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. ரத்த நாளங்களில் படியும் கொழுப்பை கரைத்து விடும். ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பயன் கிடைக்கும்.சர்க்கரை பாதிப்பு இருப்பவர்கள், அவரைக்காயை உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், கிறுகிறுப்பு, கை, கால் மரத்துப்போதல் சரியாகும். அவரைக்காயில் புரதச்சத்து ஏராளம் இருக்கிறது. கொழுப்பு மிகவும் குறைவு; ஒரு கப் அளவுள்ள அவரையில் புரதச்சத்து, 12.9 கிராம், நீர்ச்சத்து, 122 கிராம், சாம்பல் சத்து, 1.4 கிராம், நார்ச்சத்து, 9.2 கிராம், கொழுப்புச்சத்துகள், 1.2 கிராம், எரிசக்தியான கார்போஹைட்ரேட், 569 கலோரி அடங்கியுள்ளது.இதனுடன் நார்ச்சத்து, சர்க்கரைச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி, ரிபோஃப்ளேவின், நியாசின், சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செம்புச்சத்து, செலினியம், சோடியம், கொழுப்பு அமிலங்களான ஒமேகா 3, ஒமேகா 6 ஆகியனவும் மிகுதியாக அடங்கியுள்ளன.மனித உடலுக்கு தேவையான கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் இருப்பதால், அவரைக்காய் அதிகப்படியான பலன்களை கொடுக்கிறது. அவரைப்பிஞ்சை சமைத்து உண்டுவந்தால், உடலில் ஏற்படும் பித்தம் குறையும்; கண் நரம்புகள் ஊக்கம் பெற்று, மங்கிய பார்வை தெளிவடையும். அதிசார பேதி, நீண்டகாலமாக ஆறாத புண்ணை குணமாக்கும் தன்மையுடையது அவரை. பசியைத் தூண்டக்கூடியது அவரைக்காயை நன்றாக கழுவி, நுனியைப் பிரித்து நாரை தனியாக எடுத்து, பொடியாக நறுக்கி பொரியல் செய்து உண்ண வேண்டும். இவ்வாறு பொரியலாக உண்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் அதிகம். மலச்சிக்கல், வயிற்றுப் பொருமல் நீங்கும். அவரையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் எலும்பு தேய்வு பிரச்னை வரவிடாமல் தடுக்கும். மூட்டு வலிக்கும் இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மூளையை வலுவாக்கி, அறிவுக்கூர்மையை அதிகரிக்கவும் உதவும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், அவரைக்காயை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்