உள்ளூர் செய்திகள்

நோய் தீர்க்கும் இஞ்சி

வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி மற்றும் வாயு வெளியேற்றியாகவும் இஞ்சி பயன்படுகிறது. இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு அல்லது எலுமிச்ச பழச்சாறு வகைக்கு, 30 மில்லியுடன் தேன், 15 மில்லி கலந்து, 15 மில்லியளவாக அடிக்கடி குடித்து வந்தால், ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும். இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் வகைக்கு, 15 மில்லியளவு கலந்து, 15 மில்லியளவாக மூன்று வேளை குடித்தால் இருமல், இரைப்பு தீரும். 200 கிராம் இஞ்சியை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கி, 200 கிராம் தேனில் ஊறப்போட்டு, 4 நாட்கள் கழித்து, தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில், 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடன் பிணி நீங்கி, பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சு வலியும், மனத்திடமும் பெற்று முகம் பொலிவும், அழகும் பெறும். இஞ்சி முரப்பா சாப்பிட்டு வந்தால், வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்புச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும். 10 கிராம் இஞ்சி, 3 வெள்ளருக்கம் பூ, 6 மிளகு இலைகளைச் சிதைத்து, 1/2 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி, 2 வேளை குடித்து வந்தால், ஆஸ்துமா, நுரையீரல் சளி அடைப்பு நீங்கும். முற்றிய இஞ்சியை தோல் நீக்கி, அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து, இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு, நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இருமுறை, தலை முழுகி வந்தால் நீர்க் கோவை, நீர்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்புப் பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் நீங்கும். இஞ்சியை சமையலுடன் சேர்த்துக் கொண்டால், வாயு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்