உள்ளூர் செய்திகள்

ஹெல்தி ஏஜிங் வழிகாட்டும் கிளினிக்!

முதுமை என்பது நம் அனைவருக்கும் இயற்கையாக இயல்பாக நடக்கும் விஷயம்; யாராலும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. அதே நேரத்தில், வயதானாலும் ஆரோக்கியமாக, தரமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.எழுபது வயது வரை வாழும் ஒருவருக்கு, 60 வயதில் பக்கவாதம், மறதி நோய் வந்து, அடுத்த 10 ஆண்டுகள் சக்கர நாற்காலியில் அமர்ந்து, எல்லாவற்றிற்கும் பிறரின் உதவியை எதிர்பார்த்து வாழும் வாழ்க்கை, வாழ்க்கையாக இருக்க முடியாது.கடைசி வாழ்நாள் வரை நம் வேலைகளை நாமே செய்து, இயல்பாக இருப்பதற்கு பெயர் தான் 'ஹெல்தி ஏஜிங்!'இதற்கு என்ன செய்யலாம்?சர்க்கரை கோளாறு உள்ளவர்களுக்கு வயதாகும் போது, உடல் கோளாறுகள் வரும் வாய்ப்பு மற்றவர்களை விடவும் மூன்று, நான்கு மடங்கு அதிகம் உள்ளது. குறிப்பாக 'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய்.டிமென்ஷியா வந்தால் குறிப்பிட்ட நிலைக்கு மேல் எந்த சிகிச்சையும் கிடையாது. வருமுன் காப்பது தான் சிறந்தது.எனவே, எங்கள் மையத்தில் டிமென்ஷியா கிளினிக் துவங்கியுள்ளோம். 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 'ஸ்கிரீனிங்' செய்கிறோம். எந்த நிலையில் மறதி நோய் உள்ளதோ, அதற்கு தகுந்தாற்போல ஆலோசனை, சிகிச்சை செய்ய வழி காட்டுகிறோம்.இது தவிர, யோகா, ஆர்ட் தெரபி உட்பட பல்வேறு தெரபிகள் உள்ளன. இவை மேற்கண்டு நோய் தீவிரம் அடையாமல் இருக்க உதவும்.ஸ்கிரீனிங் செய்யும் போது, டிமென்ஷியா தவிர, மன அழுத்தம், மனப் பதற்றம் இருப்பது தெரிந்தால், அதற்கும் தகுந்த ஆலோசனை வழங்கப்படுகிறது.மன அழுத்தமும், சர்க்கரை கோளாறும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதை சில ஆண்டுகளுக்கு முன் செய்த எங்களின் ஆய்வில் உறுதியாகிஉள்ளது.நம் நாட்டில் குறிப்பாக பெண்களுக்கு இருக்கும் பிரச்னை 'பொதுவான உடல் பலவீனம்'.தசைகள், எலும்பு, நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருந்தால், எந்த நோய் வந்தாலும், அதை எதிர்கொள்ளும் திறன் நன்றாக இருக்கும். குழந்தை பருவத்தில் இருந்தே சரியான அளவில் புரதச்சத்து, உடற்பயிற்சி இருந்தால், உடல் பிரச்னைகளை சுலபமாக சமாளிக்கலாம். சரியான புரதமும் உடற்பயிற்சியும் இதற்கு உதவும். டாக்டர் ஆர்.எம்.அஞ்சனா, நிர்வாக இயக்குனர், டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம்,சென்னை89391 10000, 044 - 2835 9050drmohans@diabetes/ind.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்