உள்ளூர் செய்திகள்

குழந்தைகளிடம் ஒளிந்திருக்க வாய்ப்பிருக்கும் இதய பிரச்னைகள்!

குழந்தை பிறந்த உடனே பிறவி கோளாறுகளை எளிதில் கண்டறிய முடியும். ஆனால், இதயத்தில் ஏற்படும் சில பிரச்னைகள், வெளியே தெரிவதற்கு சில வாரங்கள் கூட ஆகலாம். இதனால், குழந்தை நன்றாக தானே இருக்கிறது என்ற நம்பிக்கையில், பல நேரங்களில், அறிகுறிகள் வெளியே தெரிவதற்கு முன்பாகவே 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவர். கர்ப்ப காலத்தில், 20வது வாரத்தில், கருவுக்கான பிரத்யேக 'எக்கோ கார்டியோகிராம்' பரிசோதனை செய்ய வேண்டும். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு இதய குறைபாடுகள் இருப்பதை அறிய இது உதவும். குழந்தை பிறந்த, முதல் ஒரு சில நாட்களில், அதன் ரத்த ஓட்ட அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, குழந்தையின் நுரையீரல்கள் இயங்க தொடங்கி, ரத்த ஓட்டம் படிப்படியாகக் கருவில் இருந்த அமைப்பில் இருந்து தனது அமைப்பிற்கு மாறும் போது, சில இதய கோளாறுகள் ஏற்படலாம். குழந்தை பிறந்த பிறகு, 'பல்ஸ் ஆக்சிமெட்ரி' மற்றும் முழுமையான உடல் பரிசோ தனை செய்தால், நோய்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், அதன் அறிகுறிகள் தெரிந்து விடும். பெற்றோர் கவனிக்க வேண்டிய அறிகுறிகள்... * சரியாகப் பால் குடிக்காதது * பால் குடிக்க வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் எடுத்துக் கொள்வது * பால் குடிக்கும் போது ஏற்படும் அதிகப்படியான வியர்வை * மூச்சு விடுவதில் சிரமம் * உடல் எடை இயல்பாக அதிகரிக்காமல் போவது * அடிக்கடி ஏற்படும் சுவாச குழாய் தொற்றுகள் * குழந்தையின் நாக்கு, உதடுகள், தோலில் நீல நிறத்திட்டுக்கள் ஏற்படுதல் இது போன்ற அறிகுறிகள தொடர்ந்து இருந்தால், உடனடியான மருத்துவ ஆலோசனை அவசியம். குழந்தை பிறந்த பின், வழக்கமான பரிசோதனையின் போது, இதயத்தின் இயல்பான லப் டப் ஒலியை தவிர, 'முணுமுணுப்பு' ஒலி கேட்பது, சில நேரங்களில் பிறவி இதய குறைபாட்டின் முதல் அறிகுறியாக இருக்கலாம். • பரிசோதனை முடிவுகள் பல இதய கோளாறுகளை, நீண்டகால இதய பரிசோதனைகள் இன்றி குணப்படுத்த முடியும். சிலவற்றிற்கு பல கட்ட சிகிச்சைகள், தொடர் கண்காணிப்பு தேவைப்படலாம். • இதயத்தில் ஓட்டை “இதயத்தில் ஓட்டை” என்பது, இதயத்தின் இரு அறைகளுக்கு இடையே உள்ள திறப்பைக் குறிக்கிறது. • திறப்பின் அளவு மற்றும் ரத்த ஓட்டத்தின் அளவு • குழந்தையின் இயல்பான வளர்ச்சி மற்றும் உடல் எடை • நுரையீரலில் உள்ள ரத்த நாளங்களில் அழுத்தத்தின் அளவு சில குறைபாடுகள் வழக்கமான கண்காணிப்பின் மூலம், இந்த திறப்பு நாளடைவில் தானாகவே மூடிவிடும். சில குழந்தைகளுக்கு, பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து, அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஒரே மாதிரியான பாதிப்பு கொண்ட இரண்டு குழந்தைகளுக்கு வயது, பாலினம், பிற உடல்நலப் பிரச்னைகளைப் பொறுத்து, முற்றிலும் மாறுபட்ட சிகிச்சை முறைகள் தேவைப்படலாம். டாக்டர் மஹ்பூபு சுப்ஹானி, மூத்த இதயவியல் நிபுணர், காவேரி மருத்துவமனை, திருநெல்வேலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !