நாங்க இப்படிதானுங்க!: பேபி சோப்பு தான் பயன்படுத்துறேன்!
காலை உணவுடன் சேர்த்து, தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பேன். பாட்டிலில் அடைத்த ஜூஸ் குடித்ததே இல்லை. பிரஷ் ஜூஸ் தான் என், 'சாய்ஸ்!' ரோஸ் வாட்டருடன், கிளிசரின் சில துளிகள் சேர்த்து மாலை நேரத்தில் முகத்தைத் துடைப்பது வழக்கம். மதிய உணவில் மீன், பருப்பு கட்டாயம் சேர்த்துக் கொள்வேன். எல்லா நேரமும், 'ஹெல்தி டயட்' தான் சாப்பிடுவேன். இரவு தூங்கப் போவதற்கு முன், பேபி ஆயிலால் உடல் முழுவதும் மசாஜ் செய்து கொள்வேன். குளிப்பதற்கும் பேபி சோப்பு தான் பயன்படுத்துகிறேன்.- ஸ்ரேயா சரண், நடிகை