உள்ளூர் செய்திகள்

வாசனையை முகர்ந்தால் வரும் ஹார்மோன் கோளாறு!

வாசனை மெழுகுவர்த்திகளை வீட்டில் ஏற்றுவது அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒன்று. 'பார்பின்' எனப்படும் பெட்ரோலியப் பொருளால் தயாரிக்கப்படும் இவை, வீட்டிற்குள் இருக்கும் காற்றை மாசுபடுத்துபவை. இவை எரியும் போது, இதிலிருந்து, 'அல்கைன்ஸ், அல்கீன்ஸ்' என்ற இரு வேதிப் பொருட்கள் காற்றில் கலக்கின்றன. இந்த மெழுகுவர்த்திகளில், செயற்கை வாசனைக்காக பயன்படுத்தப்படுவதும், பெட்ரோலிய உபபொருள், 'பேலைட்ஸ், சென்ட்' உட்பட செயற்கை வாசனைப் பொருட்கள் அனைத்திலும் இது பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து இந்த செயற்கை வாசனையை சுவாசிக்கும் போது, உடலில் தீவிரமான ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தும்.- டாக்டர் ஸ்டீவன் ஆர்.கியூன்ட்ரி, மருத்துவ ஆராய்ச்சியாளர், அமெரிக்கா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்