உள்ளூர் செய்திகள்

கலோரி குறைவதால் வரும் கருப்பை கோளாறு!

தினமும் உடற்பயிற்சி செய்வது, இதய செயல்பாட்டிற்கு நல்லது. ஆறு முதல் எட்டு மணி நேரம் ஆழ்ந்த துாக்கம் வரும். நாளமில்லா சுரப்பிகள், தேவையான ஹார்மோன்களைச் சுரக்கும். காலையில் உற்சாகமாக எழுந்து, முழு மனதுடன் வேலைகளைச் செய்யலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மொத்தத்தில் உடலுழைப்பு இருந்தால் மட்டுமே, உடல் ஆரோக்கியமாக இருக்கும். இது தான் இயற்கை நியதி.அதே சமயம், உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று 'ஜிம்'மிற்கு சென்று, பல மணி நேரம் தீவிரமாக உடற்பயிற்சி செய்வது, எடை துாக்குவது, கனமான பொருட்களைத் தள்ளுவது என்று தீவிரமாக உடற்பயிற்சி செய்கின்றனர்; இதனால், கலோரி குறையும். அதே நேரம் பல சிக்கல்களை ஏற்படுத்தலாம்.போதுமான அளவு கலோரி உடலில் இல்லாமல் இருக்கும் இளம்பெண்களுக்கு, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் மாதவிடாய் வராமல் இருக்கும். இது கருத்தரிப்பதையும், தாம்பத்திய உறவையும் பாதிக்கலாம். அதே நேரத்தில், உடல் பருமன் அதிகம் உள்ள பெண்கள் எடையைக் குறைக்க, தீவிரமாக உடற்பயிற்சி செய்தால், கருமுட்டை உற்பத்தியை துாண்டும் 'ஈஸ்ட்ரோஜென்' ஹார்மோன் சுரப்பில் பாதிப்பை எற்படுத்தி, கரு தரிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.திருமணம் ஆகாத இளம்பெண்கள் செய்யும் தீவிர உடற்பயிற்சி பல நேரங்களில், மாதவிடாய் சுழற்சியில் சிக்கலை ஏற்படுத்தி, பின்னாளில் கரு உண்டாவதில் பிரச்னையை ஏற்படுத்தலாம். குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் இருக்கும் பெண்கள், தீவிர உடற்பயிற்சியை தவிர்ப்பது நல்லது.- 'மெட்டபாலிசம்'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !