ஆழ்ந்த தூக்கத்திற்கு இட்லி, தோசை!
துாக்கமின்மை பொதுவான பிரச்னையாக இருந்தாலும், துாங்கும் நேரத்திற்கும், விரும்பி சாப்பிடும் உணவிற்கும் தொடர்பு உள்ளது. ஒரு நாளில், ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக துாங்கினால், வெள்ளை சர்க்கரை, மைதாவில் செய்யும் பாஸ்தா, பர்கர், ரொட்டி போன்ற துரித உணவுகளை அதிகம் சாப்பிட பிடிக்கும்; காய்கறி, பழங்கள், புரதம் நிறைந்த பருப்பு வகைகளை சாப்பிட பிடிக்காது.எட்டு மணி நேரம் ஆழ்ந்து துாங்கும் போது, நம் பழக்கத்தில் உள்ள சாதம், கூட்டு, பொரியல், இட்லி, தோசை சாப்பிடு வதில் பிரச்னை இருக்காது. துாக்கமின்மை இருந்தால், பசியைத் துாண்டும் 'க்ரேலின் ஹார்மோன்' அதிகம் சுரந்து, துரித உணவுகள் சாப்பிடும் உணர்வு அதிகரிக்கும். இதன் தொடர்ச்சியாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி, ஆழ்ந்த துாக்கம் இல்லாமல், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை துாக்கம் கலையும். அதே நேரம், சமச்சீரான உணவு சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்; ஆழ்ந்த இடைவெளி இல்லாத, எட்டு மணி நேர துாக்கத்திற்கு பிரச்னை வராது.ஆதாரம்: கொலம்பியா மருத்துவ மையம்