உள்ளூர் செய்திகள்

ப்ளீச் செய்தால், பளீச் ஆகுமா பல்?

செந்தில், காரைக்குடி: ஆறு மாதத்திற்கு ஒரு முறை, பற்களை, 'ப்ளீச்' செய்ய வேண்டும் என, என் நண்பர் கூறுகிறார். இது சரியா?பற்களின் மேல் உள்ள எனாமலுக்கு, ஒயின், எலுமிச்சை, காபி, காற்றூட்டப்பட்ட பானங்களே எதிரி என, கண்டறியப்பட்டுள்ளபோது, ஆறு மாதத்திற்கு ஒரு முறை, 'ப்ளீச்' செய்தால், நாளாவட்டத்தில், எனாமல் காணாமலேயே போய்விடும். பின், பல்லில்லா பரட்டையாகி விட வேண்டியது தான். தேவையா இது? டாக்டரின் பரிந்துரையின்றி, எதுவுமே செய்யக் கூடாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !