அஜீரணமும் இதய நோய் அறிகுறிகளில் ஒன்றுதான்
பொ துவாக அஜீரணம், நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, மாரடைப்பு என மக்கள் பதட்டம் அடைகின்றனர். சில நேரங்களில் மாரடைப்பு அறிகுறிகளை அஜீரணம் என புரிந்து, இறப்புவரை செல்கின்றனர். இரண்டையும் பிரித்தறிய வேண்டியது அவசியம்.அஜீரணம் * உணவுக்குப் பிறகு அல்லது இரவில் மார்பில் எரிச்சல் உணர்வு* படுக்கையிலோ, குனியும்போதோ அதிகரிக்கும் மார்பு வலி* வாயில் புளிப்பு அல்லது அமிலம் போன்ற சுவை* உணவு மார்பு நடுவில் அல்லது தொண்டையில் சிக்கியிருப்பது போன்ற உணர்வு மாரடைப்பு * மார்பு வலி அல்லது சிரமம்* பலவீனம், தலைச்சுற்றல், மயக்கம்* தாடை, கழுத்து, முதுகு பகுதியில் வலி அல்லது சிரமம்* ஒரு கை அல்லது இரு கைகளிலும், தோளிலும் வலி, சிரமம்* மூச்சுத்திணறல்* வாந்தி உணர்வு* அதிக வியர்வை (சர்க்கரை வியர்வை போல்)