உள்ளூர் செய்திகள்

"அறுவை சிகிச்சை வெட்டுக்கு டிரெஸ்சிங் அவசியமா?

* கங்காதரன், சிவகங்கை: என் வயது, 62. ஆறு ஆண்டுகளாக மூட்டு தேய்மானத்தால் வலி ஏற்பட்டு அவதிப்படுகிறேன். மூட்டு மாற்று சிகிச்சை செய்தால் முழங்காலை மடக்குவது கடினம் என, நண்பர் கூறுகிறார். இது சரிதானா?மூட்டுமாற்று அறுவை சிகிச்சையின் முக்கிய நோக்கம், மூட்டின் அசைவை முன்னேற்றம் செய்வதே. சரியான தொழில் நுட்பத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டால், உங்களால் முழங்கால், மூட்டு நன்றாக மடக்க முடியும். நீட்ட முடியும் என்பதில், எந்த சந்தேகமும் தேவையில்லை.* ராவணன், விருத்தாச்சலம்: என் வயது, 24. தோள்மூட்டு விலகிக் கொண்டிருக்கிறது. டாக்டரிடம் ஆலோசித்ததில், 'மூட்டு நுண்துளை சிகிச்சையில் சீரமைக்கலாம்' என்றார். அதை விளக்க முடியுமா?மூட்டு நுண்துளை சிகிச்சை என்பது, மூட்டில் உள்ள பிரச்னைகளை, இரு துவாரங்கள் வழியே, ஒரு நுண்ணிய கேமராவை செலுத்தி, அதிநவீன கருவிகளால் துல்லியமாக பிரச்னையை சீரமைப்பது ஆகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் வலி மிகமிகக் குறைவு. ரத்த சேதாரம் இல்லை. குணமாவதும் மிக விரைவு. மருத்துவமனையில் தங்கும் காலம் ஓரிரு நாட்களே. மருத்துவ செலவும் குறைவு தான். சாதாரணமாக செய்யப்படும் திறந்தவெளி அறுவை சிகிச்சையைவிட, இதில் பல நன்மைகள் உள்ளன.* மார்ட்டின், கோபி: இரு வாரங்களுக்கு முன், விபத்தில் காலில், 'டிபியா' என்கிற எலும்பு முறிந்தது. அறுவை சிகிச்சை செய்து சீரமைக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்த புண்ணில், தினசரி டிரெஸ்சிங் செய்வது அவசியமா?அறுவை சிகிச்சையால் உண்டான புண், பொதுவாக சுத்தமானவை. சுத்தமான புண்ணிற்கு, தினசரி டிரெஸ்சிங் மாற்றுவது அவசியம் இல்லை; கிருமிகள் தொற்றி இருந்தாலோ, புண்ணில் நீர்வடிந்தாலோ அவசியம். * அருள்ராஜ், தேனி: நான்கு ஆண்டுக்கு முன் இடுப்பு மூட்டு மாற்று சிகிச்சை செய்தேன். சமீபத்தில் கீழே விழுந்ததில் தொடை எலும்பு முறிந்தது. இதற்காக பிளேட் போட்டுள்ளனர். முறிந்த எலும்பு இணைவதை மேம்படுத்த, 'டெரிபார்டைட்' ஊசியை எடுக்கலாமா?'டெரிபார்டைட்' மருந்து, அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுபவர்களுக்கு எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க கொடுக்கப்படுவது. எலும்பின் அடர்த்தி குறைவால், உங்கள் எலும்பு முறிந்து இருந்தால், இதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாமே தவிர, முறிந்த எலும்பை துரிதமாக இணைய வைக்கும் சக்தி, இந்த, 'டெரிபார்டைட்' மருந்துக்கு கிடையாது.டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்