உள்ளூர் செய்திகள்

ஜாகிங்... - நலம் பெற நல்ல வழி

முதலில், 55 கஜ தூரத்தை (ஒரு கஜ தூரம் என்பது 3 அடி) மட்டும், நான்கு தடவை மெல்லோட்டமாக நடங்கள். பின், இதே தூரத்தை, நான்கு முறை சாதாரண நடையாக நடங்கள். இந்த முறையில், மாற்றம் செய்யாமல் ஆறு வாரம் நடக்கவும்.* பிறகு, 110 கஜ தூரத்தை, 45 விநாடிகளில் ஜாகிங் (மெல்லோட்டம்) செய்து கடக்கவும். இதை ஒரு வாரப் பயிற்சிக்குப் பின், 110 கஜ தூரத்தை 30 விநாடிகளில் கடக்கவும். கூடுதலாகவோ குறைவாகவோ செய்ய வேண்டாம்.* கால் பாதங்களில் முக்கியமான, 52 வகையான நரம்புகள் முடிகின்றன. மெதுவாக ஓடும்போது, இவை அதற்கேற்ப தயாராகும். இதற்குப் பிறகு, ஆறு மாதத்திற்கு ஒரு மைல் தூரத்தை, ஒன்பது நிமிடங்களில், கடக்கும்படி ஓடுங்கள்.* பிறகு வாழ்நாள் முழுவதும், ஒன்பது நிமிடங்கள் மட்டும் 'ஜாகிங்' செய்தால் போதும். அக்குபிரஷர் சிகிச்சை போல, 52 வகையான நரம்புகளும் உடலை முழுப் பாதுகாப்பில் வைத்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !