உள்ளூர் செய்திகள்

குண்டு மல்லி... கொஞ்சம் கேளு! அதிக புரதம் ஆபத்து!

உடல் எடை அதிகரிக்க, என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும். விளம்பரங்களைப் பார்த்து, ஒரே மாதத்தில், 5, 10 கிலோ குறைக்க முயற்சிப்பது; மார்க்கெட்டில் கிடைக்கும் கண்ட கண்ட புரத பானங்களை குடிப்பது தவறு. தேவைக்கு அதிகமாக சாப்பிடும் புரதம், உடல் பிரச்னைகளுக்கு வழி செய்யும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், முதலில் தவிர்ப்பது கார்போஹைட்ரேட் உணவுகளை; இதுவும் தவறு. கார்போஹைட்ரேட்டின் தினப்படி தேவை குறைந்து விட்டால், முழு எனர்ஜியோடு வேலை செய்ய முடியாது. சீக்கிரமே சோர்வாகி, எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்போம். 'குண்டாக இருக்கிறோம், எடையைக் குறைக்க பிரத்யேக வழிகளைப் பின்பற்றுகிறோம்' என்ற அயர்ச்சியை தராத வகையில் டயட், உடற்பயிற்சி வழிமுறைகள் இருக்க வேண்டும்; அதற்கு நிபுணரின் அட்வைஸ் அவசியம். திவ்யா சத்யராஜ், நியூட்ரிஷியனிஸ்ட், சென்னை.divyasathyaraj@yahoo.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !