உள்ளூர் செய்திகள்

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - கலோரியை, டிவி அதிகரிக்கும்!

ஆரோக்கியமற்ற உணவு, பரம்பரைக் காரணங்கள், உடலுழைப்பு இல்லாதது, தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது, கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகள், போதிய தூக்கம் இல்லாதது, நேரம் தவறி சாப்பிடுவது என, உடல் பருமனுக்கு பல காரணங்கள் உள்ளன. வழக்கமாக நாம் சாப்பிடும் உணவுகளோடு, பல்வேறு மாநில, சர்வதேச உணவுகளும் இன்று கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கின்றன. எல்லா, 'டிவி' சேனல்களிலும் தவறாமல் சமையல் நிகழ்ச்சி உள்ளது. ஒரு உணவை சமைக்கக் கற்றுத் தருவதைப் பார்க்கும்போதே, சாப்பிட வேண்டும் என்ற ஆவல் வருகிறது. ஒருவரின் உடல் எடை, வயது, உடல் பிரச்னை இவற்றிற்கு ஏற்ப, நாள்தோறும் தேவைப்படும் கலோரியின் அளவு மாறுபடும். அதிகப்படியான உடல் பருமனைக் குறைக்க, உங்களுக்கு பொருத்தமான உணவு மற்றும் உடற்பயிற்சி அட்டவணையை, ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைப்படியே தயாரித்துக் கொள்ள வேண்டும். அதை சரியாக பின்பற்றினாலே, அதிக உடல் எடையைக் குறைக்கலாம். சுபத்ரா சுந்தர், நியூட்ரிஷனிஸ்ட். கோவை.subathraasundar@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !