உள்ளூர் செய்திகள்

லாஸ்வேகஸ் தீர்மானிக்கும் சூப்பர் புட்!

'ஜிம்'மில் ஒர்க் அவுட் செய்வதற்கு முன், செய்த பின், தசைகளின் வலிமைக்கு புரத பானம் குடிப்பது நமக்கு தெரியும். ஆனால், இளநீர் குடிப்பதை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அமெரிக்காவில் ஜிம் உடற்பயிற்சிக்கு பின், இளநீர் குடிக்கும் பழக்கம் சிலரிடம் இருப்பதை பார்த்து, வியப்புடன் விசாரித்ததில், 'இது சூப்பர் புட்!' என்று பதில் வந்தது. இதன் பின்னணியை ஆராய்ந்ததில், ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவின் லாஸ்வேகஸில், உணவு உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இணைந்து, கூட்டமைப்பை நடத்துகிறது. இதில், ஒவ்வொரு ஆண்டும் எந்தப் பொருளின் விற்பனையை அதிகரிக்கலாம் என்று தீர்மானிக்கப்படும்.அந்த உணவுப் பொருள், சூப்பர் புட் என்று பிரசாரம் செய்யப்படும்; சினிமா, விளையாட்டு பிரபலங்களை வைத்து விளம்பரம் வரும். உண்மையில் இது தான் சூப்பர் பானம் என்று குடிப்போம். இதில், பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் இடம் பெறும். உண்மையில் ஆரோக்கியம் எதில் இருக்கிறது?நம் வாழ்விடத்தில் இருந்து, 100 கி.மீ., சுற்றளவில் விளையும் காய்கறி, பழங்களில் உள்ளது.ஆதாரம்: மின்ட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !