உள்ளூர் செய்திகள்

மனசே, மனசே குழப்பம் என்ன? - மீண்டும் வருவேன்!

அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்தில் பிறந்தேன். என் வயது, 33; இயற்பெயர், லீட்டி ஜோசப் அனோவா. என்னை ஜோ என்று தான் செல்லமாக அழைப்பர். மனைவி, கலினா பெக்கர். எங்களுக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர். முதலில், கால்பந்து விளையாட்டில் தான் எனக்கு ஆர்வம் வந்தது. பின், மல்யுத்தத்திற்கு மாறி விட்டேன். நான் மல்யுத்தப் போட்டி களில், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வெற்றி பெற்ற போது, இளைஞர்கள், குறிப்பாக குழந்தைகளின் கனவு நாயகனாக ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.'லுக்கிமீயா' எனப்படும் ரத்தப் புற்று நோயால், நான் பாதித்துள்ளதை, கடந்த வாரம் நான் அறிவித்த வினாடியில், மல்யுத்த போட்டியை காண வந்த ஒட்டு மொத்த என் ரசிகர்களும் கண்ணீர் விட்டு அழுததும், அனைவரும், 'தேங்க் யு ரோமன்' என, சத்தமாக கோஷம் எழுப்பியதையும், என் உயிர் உள்ளவரை மறக்க முடியாது.சக வீரர்கள் என்னை கட்டி அணைத்து, கண்ணீர் மல்க, பிரியா விடை கொடுத்தனர். சமூக வலைதளங்களில், 'தேங்க் யு ரோமன்' என்ற, 'ஹேஷ்டேக்' சர்வதேச அளவில், 'டிரெண்டிங்'கில் இருந்தது. இதையெல்லாம் நினைக்கும் போது, என் மேல் இத்தனை அன்பாக இருக்கும், லட்சக்கணக்கான ரசிகர்களிடம் ஒரு உண்மையை மறைத்து விட்டேனே என்று குற்ற உணர்வாக இருக்கிறது. தயவு செய்து, என்னை மன்னித்து விடுங்கள்.கிட்டத்தட்ட, 11 ஆண்டுகளுக்கு முன், நான் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டேன். அதிலிருந்து மீண்டு வந்து தான், மல்யுத்த போட்டியில் பங்கேற்றேன். ஆனால், இந்த விஷயத்தை நான் வெளியில் சொல்லாமல் மறைத்து விட்டேன். தற்போது மீண்டும், அதே பாதிப்பு வந்துள்ளது.இந்த நோய் இருப்பதால், என்னால் சண்டையிட முடியாது. எனவே, என், 'யுனிவர்செல் சாம்பியன்ஷிப் பெல்ட்'டை திருப்பிக் கொடுக்கிறேன்.பல ஆண்டுகளுக்கு முன், தங்கு வதற்கு வீடு, உணவு இல்லாமல் தவித்தேன். 'லுக்கிமீயா' வென்று மல்யுத்தத்தில் தொடர்ந்து ஜெயித்த போது, எனக்கு எல்லாம் கொடுத்தது இந்த, டபிள்யு. டபிள்யு.இ., தான். இப்போது மீண்டும் சிகிச்சைக்கு செல்கிறேன். என் குடும்பத்துடன் நேரத்தை செலவிடப் போகிறேன்.இது என்னுடைய ஓய்வுக்கான அறிவிப்பு இல்லை. நோயின் தீவிரம் என்னை ஒன்றும் செய்து விடப் போவதில்லை. இதிலிருந்து மீண்டு வருவேன். வெகு விரைவில், என்னை, களத்தில் பார்ப்பீர்கள். உங்கள் அனைவரையும், 'மிஸ்' பண்ணுறேன். அனைவரும் நலமுடன் வாழ, எப்போதும் பிரார்த்திக்கிறேன்.மல்யுத்த போட்டியில் பங்கேற்றதில் இருந்தே, அசைக்க முடியாத வீரராக, நான் விளங்கியதற்கு என் திறமை மட்டும் காரணம் இல்லை; இத்தனை ரசிகர்களின் அன்பு தான் என்று இப்போது புரிகிறது. இந்த அன்பு என்னை மீண்டும் புதிய சக்தியுடன் கொண்டு வரும் என, நம்புகிறேன்.ரோமன் ரெயின்ஸ்,சர்வதேச மல்யுத்த வீரர், புளோரிடா, அமெரிக்கா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்