உள்ளூர் செய்திகள்

புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கு நவீன நீராவி சிகிச்சை!

சிறுநீர் பைகளுக்கு கீழே, சிறுநீர் குழாயை சுற்றி புரோஸ்டேட் என்ற சுரப்பி, 40 வயதிற்கு மேல் மெதுவாக வளர ஆரம்பித்து, 60 வயது வரை பெரிதாகிக் கொண்டே சென்று சிறுநீர் பாதையை அடைக்கும். 50 சதவீத ஆண்களுக்கு இப்பிரச்னை உள்ளது. அறிகுறிகள் வெளிப்படும் வயதும் நபருக்கு நபர் மாறுபடும். அறிகுறிகள் வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடுத்த நிலையில் சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு இருந்தாலும் உடனே சிறுநீர் வெளி யேறாமல் தாமதமாக வெளியேறுவது, தொடர்ச் சியாக இல்லாமல் விட்டு விட்டு சிறுநீர் வெளியேறும். சிறுநீர் வெளியேறும் வேகம் வழக்கத்தை விடவும் குறைவது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிரமப்பட்டு வெளியேற்ற வேண்டிய கட்டாயம். காரணம் சிறுநீர் வெளியேற முடியாமல் சிரமப்படும் இப்பிரச்னைக்கு, 'புரோஸ்டேட் என்லார்ஜ்மென்ட்' என்று பெயர். வயது அதிகரிப்பது தான் இதற்கு பிரதான காரணம். இந்த சுரப்பியில் 'ஆன்ட்ரோஜென் ரிசப்டார்'கள் என்ற புரத ஊக்குவிகள் உள்ளன. வயதாகும் போது, 'டெஸ்ட்ரோஸ்டீரான் ஹார்மோன்' இவற்றை அதிகமாக துாண்டு வதாலும் சுரப்பி பெரிதாகலாம். இயல்பாக 20 - -30 கிராம் எடையுள்ள இந்த சுரப்பி வளர ஆரம்பித்தால், 40 -- 200 கிராம் எடை வரை வளரும். புரோஸ்டேட் சுரப்பி வெளிப்புறமாக வளர்ந்தால் 100 செ.மீ., இருந்தாலும் சிறுநீர் பாதையை அடைக்காது. எந்த அளவு சுரப்பி வளர்ந்துள்ளது என்பதை விட, சிறுநீர் பாதையை அடைக்கிறதா என்பது தான் முக்கியம். சிகிச்சை சிறுநீர் கழிக்க சிரமப்படும் நோயாளிகளுக்கு, சிறுநீரகங்களின் செயல்பாடு, சிறுநீரில் ரத்தம் உள்ளதா, சிறுநீர் வெளியேறும் வேகம் இவற்றை அறிய ரத்த, சிறுநீர் பரிசோதனை செய்வோம். சிறுநீர் பையில் எந்த அளவு சிறுநீர் தங்குகிறது, புரோஸ்டேட் சுரப்பியின் அளவை அறிய அல்ட்ரா சவுண்டு, கேன்சர் பாதிப்பு உள்ளதா என்பதற்கு பி.எஸ்.ஏ., போன்ற பரிசோதனைகள் செய்வது அவசியம். கேன்சர் இல்லை என்று உறுதியானால், புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தை குறைத்து, பாதையை ரிலாக்ஸ் செய்வதற்கு மருந்துகள் தருவோம். மருந்துகளால் பலன் தெரியாத பட்சத்தில், நோயாளியின் தேவைக்கு ஏற்ப எண்டோஸ்கோபி, லேசர், ரோபோடிக் அறுவை சிகிச்சை நடைமுறையில் உள்ளது. வாட்டர் வேபர் தெரபி அறுவை சிகிச்சைகளுக்கு மாற்றாக தற்போது நவீன தொழில்நுட்பத்தில் வாட்டர் வேபர் -Water wafer என்ற நீராவி சிகிச்சை வந்துள்ளது. சிறுநீர் பாதையில் கேமரா பொருத்தி, சிறிய ஊசி வழியாக நீராவியை மூன்று நிமிடங்கள் செலுத்துவோம். புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள திசுக்கள் வளர்ந்து பெரிதாகின்றன. அதிகப்படியாக வளர்ந்த இடத்தில் வலியோ, உணர்ச்சியோ இருக்காது. எனவே, நீராவியை செலுத்தும் போது அந்த இடம் வெந்து, சுருங்கி விடும். அறுவை சிகிச்சை செய்யும் போது உடனடியாக தெரியும் பலன் இதில் கிடைக்காது. குறைந்தபட்சம் 10 நாட்கள் கழித்தே வீக்கம் சுருங்கும். வெளி நோயாளியாகவே சிகிச்சை பெறலாம். இந்த முறை நடைமுறைக்கு வந்த பின், பெரும்பாலும் அறுவை சிகிச்சை தேவைப்படுவதில்லை. நீண்ட நாட்கள் மருந்து சாப்பிடுவதால் விந்தணுக்கள் வெளியேறுவதில் சிக்கல், ஆண்மைக் குறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். நீராவி சிகிச்சையில் இது போன்ற சிக்கல்கள் இருக்காது. ஒரு முறை சிகிச்சை செய்தால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு பலன் இருக்கும். நம் நாட்டில் அறிமுகமாகியுள்ள புதிய தொழில்நுட்பம் இது. டாக்டர் அனந்த கிருஷ்ணன் சீனிவாசன், இயக்குநர், சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர்,சென்னை யூராலஜி அண்டு ரோபோடிக் இன்ஸ்டிடியூட் மருத்துவமனை, சென்னை 93442 57901, 90437 27901support@curihospital.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !