காசநோய் தீர்க்கும்முருங்கை வேர்
முருங்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப், தாம்பத்திய பலவீனத்தைப் போக்கும். மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை ரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது. முருங்கை இலைச்சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து தடவினால் முகத்தில் தடவினால் பருக்கள் மறையும். முருங்கைக்காய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி ரத்த விருத்தி, தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருகினால் மஞ்சள் காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும். விதையில் இருந்து எண்ணெய் தயாரித்து வாயுப்பிடிப்பு, மூட்டுவலிகளுக்கு பயன்படுத்தலாம். முருங்கை வேரில் இருந்து சாறெடுத்து, பாலுடன் சேர்த்துப் பருகி வந்தால் காசநோய் குணமாகும்.