உள்ளூர் செய்திகள்

டாக்டரை கேளுங்கள்

ராஜேந்திரன், மதுரை: என் வயது 73. ஆறு மாதத்திற்கு ஒருமுறை ரத்தவாந்தி எடுத்து சிகிச்சையுடன் சிரமப்படுகிறேன். இது எதனால் ஏற்படுகிறது. அதை நிறுத்த வழி என்ன. இப்போது ஹீமோகுளோபின் அளவு 7.7 மட்டுமே உள்ளது. இதை அதிகரிக்க என்ன மாத்திரை சாப்பிடலாம். ரத்தவாந்திக்கு காரணம் கல்லீரல் அல்சர் கோளாறு என்கின்றனர்.வயது 73 என்கிறீர்கள். குடிப்பழக்கம் உள்ளவராக இருந்தால் கல்லீரல் பிரச்னையும் அதனுடன் சேர்ந்து அல்சர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். ரத்தவாந்தி எடுப்பதால் ஹீமோகுளோபின் குறையலாம். குடிப்பழக்கம் இல்லாதவராக இருந்தால் கல்லீரல் சிகிச்சை நிபுணர் அல்லது குடல் இரைப்பை சிகிச்சை நிபுணரின் ஆலோசனை பெறுவது நல்லது.ஓ.ஜி.டி., எண்டோஸ்கோப்பி பரிசோதனையில் ஏதாவது அறிகுறி இருந்தால் அதற்கேற்ற சிகிச்சை அளிப்பர். ஒரு வேளை குடிப்பழக்கம் உள்ளவராக இருந்தால் கண்டிப்பாக நிறுத்த வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். போலிக் அமிலம், தயமின் மாத்திரை சாப்பிடலாம். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். கல்லீரலில் ஏற்பட்ட பிரச்னையா அல்லது அல்சர் பிரச்னையா அல்லது வேறெதுவும் நோய் உள்ளதா என்பதை பரிசோதனை செய்த பின்பே நிபுணர் சொல்ல முடியும்.-டாக்டர் அழக வெங்கடேசன் பொது மருத்துவ நிபுணர்மதுரை அரசு மருத்துவமனைதேவி, வடமதுரை: எனது கணவர் அடிக்கடி அதிகளவு மது அருந்துகிறார். இதற்கு தீர்வு காண்பது எப்படி.தற்போதைய நிலையில் குடிப் பழக்கமாக மட்டும் உள்ளதா, குடி நோயாக மாறியுள்ளதா என்பதை அறிய வேண்டும். மது போதையில் இல்லாதபோது தலைவலி, பதற்றம், உடல்நடுக்கம், துாக்கமின்மை, பசியின்மை, கை நடுக்கம், மன குழப்பம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் தெரிந்தால் மனநல டாக்டர் அல்லது குடிபோதை சிகிச்சை மையத்தில் முறையான ஆலோசனை பெற்று மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும்.- டாக்டர் ஆர்.பாலகுரு மூளை நரம்பியல் மன நல மருத்துவர், வடமதுரைகாந்திமதி, சின்னமனுார்: பிறந்த குழந்தைகளுக்கு இதய நோய் வர வாய்ப்புண்டா, அதன் அறிகுறி என்ன. எனது குழந்தைக்கு நெற்றி, தலையில் அதிகமாக வியர்க்கிறது. ஆலோசனை கூறுங்கள்.கர்ப்ப காலத்தில் 20 முதல் 24 வாரங்களில் Fetal echo பார்ப்பதன் மூலம் பெரும்பாலான பிறவி இதய நோய்களை கண்டறிய முடியும். குழந்தை பிறந்தவுடன் நீல நிறமாக மாறுவது, மூச்சு திணறல், பால் குடிக்கும் போது ஏற்படும் மூச்சு திணறல், நெற்றி, தலையில் அதிகமாக வியர்த்தல், வயதுக்குரிய சரியான வளர்ச்சியடையாமை, வயதை ஒத்த பிற குழந்தைகளுடன் விளையாடும் போது ஈடு கொடுத்து விளையாட முடியாதது, சோர்வு போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.சில பிறவி கோளாறுகள் தானாகவே சரியாகும். சிலவற்றிற்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படும். குறிப்பிட்ட காலத்தில் சரி செய்யாவிட்டால் வளர்ந்த பிறகு பிரச்னையாகும். இதுபற்றி பலர் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். இதனால் குழந்தை வளர்ந்த பின் பிரச்னைகளை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே கர்ப்ப காலம் மற்றும் குழந்தை பிறந்தவுடன் இதய பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது.- டாக்டர் என். விஜயசாரதிஇதய நோய் சிறப்பு மருத்துவர்கம்பம்.ஆர்.சந்திரன், ராமநாதபுரம்: வெரிகோஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதிலிருந்து மீள்வது எப்படி.பெரும்பாலும் 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் வெரிகோஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிக நேரம் நிற்கும் போது ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமாகி இருப்பதால் நாளங்கள் தடிமனாகி பெருத்து ரத்தம் உறைந்து ரத்த ஓட்டம் அந்தப்பகுதியில் நின்று போகும். பொதுவாக ரத்த நாளங்கள் மனித உடலில் ரத்தத்தை பம்பிங் செய்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக கொண்டு செல்ல வேண்டும்.நின்று கொண்டிருப்பதால் பாதத்திற்கு செல்லும் ரத்தம் மீண்டும் பம்பிங் ஆகி மேல் செல்வதற்கு வழியில்லாமல் போய் விடும். இது போன்ற பாதிப்பில் உள்ளவர்கள் ஆரம்ப நிலையில் வந்தால் அவர்களுக்கு இயற்கை யோகா சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். பெரிய பாதிப்பு ஏற்பட்டால் அறுவை சிகிச்சை செய்து தான் சரி செய்ய முடியும்.வெரிகோஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரிவர்ஸ் மசாஜ் மூலம் சிகிச்சையளிக்க முடியும். சுடு நீரில் ஒத்தடம், குளிர்ந்த நீரில் மாறி, மாறி ஒத்தடம் கொடுக்கலாம். மண் சிகிச்சை அளிக்கலாம். முன்புறம் குனிவது போன்ற ஆசனங்கள் செய்யலாம். இடுப்பை சுற்றி உடற்பயிற்சிகள் செய்யும் போது ரத்த ஓட்டத்திற்கு துாண்டுதல் கிடைக்கும்.-டாக்டர் எல்.டி.ஷர்மிளா இயற்கை யோகா மருத்துவர்அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்.அ.அரவிந்த், சிவகங்கை: கொழுப்பு கல்லீரல் நோய் என்றால் என்னகொழுப்பு கல்லீரல் பிரச்னைகளுக்கு முதன்மையான காரணம் மது அருந்துவது. கல்லீரலில் கொழுப்பு அதிகமாக இருந்தால் உடல் பருமன் அதிகரிக்கும். நீரிழிவு நோயால் பாதிக்க கூடும். வயிற்றில் அதிக கொழுப்பு உருவாகும். உயர் ரத்த அழுத்தம் உருவாகும். அடிவயிற்றின் மேல் வலது பக்கத்தில் வலி அல்லது அசவுகரியமாக தோன்றும். இவற்றை உணர்ந்தால் டாக்டரை அணுகி உடல் பரிசோதனை செய்யவேண்டும். கல்லீரல் இமேஜிங் ஸ்கேன், எம்.ஆர்.ஐ., அல்லது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் இந்த நோயை கண்டறியலாம். உணவு முறையில் மாற்றம் செய்ய வேண்டும். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.- டாக்டர் எஸ்.வினோத்இரைப்பை, கல்லீரல் சிறப்பு மருத்துவர்அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை.முத்துக்குமரன், சிவகாசி: எனக்கு 30 வயதாகிறது. பாலிபேக் கம்பெனியில் வேலை செய்கிறேன். அடிக்கடி தோல் அலர்ஜி, அரிப்பு வருகின்றது. தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.பொதுவாக பேக்டரி, பிரின்டிங் கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு அதிலும் குறிப்பாக கோடைகாலத்தில் தோல் அலர்ஜி, அரிப்பு இயல்பாக வரும். நல்ல காற்றோட்டமான இடம் மிகவும் அவசியம். வேலை செய்யும் இடத்தில் வெளிக்காற்று வராமல் இருந்தால் தோல் அலர்ஜி, அரிப்பு கண்டிப்பாக வரும். எப்பொழுதுமே காட்டன் உடைகள் அணிந்து வேலை செய்வது நல்லது. தவிர கையுறை அணிந்து கொள்ள வேண்டும். வேலை முடிந்த உடனே உடனடியாக கைகளை கழுவ வேண்டும். வீட்டிற்கு வந்தவுடன் குளிப்பது நல்லது. தொடர்ந்து கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும்.-டாக்டர் அய்யனார்அரசு மருத்துவமனைசிவகாசி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்