உள்ளூர் செய்திகள்

டாக்டரைக் கேளுங்கள்

சுகந்தி, மதுரை: அடிக்கடி தொண்டை வலியால் அவதிப்படுகிறேன். இதற்கு தீர்வு என்ன?காய்ச்சல் காலங்களில் தொண்டை வலி பொதுவானது என்பதால் பயப்படத் தேவையில்லை. சில சமயங்களில் இது சிறிய ஒவ்வாமை அல்லது தொற்றுகளாலும் ஏற்படலாம்.அடிக்கடி வரும் டான்சிலிடிஸ் (பெரும்பாலும் ஸ்ட்ரெப்டோகாக்கல்) இதில் டான்சில் அகற்ற வேண்டியிருக்கலாம். பாரிங்கிடிஸ் வைரஸ் அல்லது பாக்டீரியா (அடினோவைரஸ், இன்ப்ளுயன்ஸா), ஒவ்வாமை அல்லது சைனசிடிஸினால் ஏற்படும் பிந்தைய பாதிப்பு, இரைப்பை உணவுக்குழாய் பின்னோட்ட நோய், தாடைப் பகுதியில் இருக்கும் டெம்போரோமாண்டிபுலர் ஜாய்ன்ட் வலிகள் தொண்டைக்கு பரவுவது காரணமாக இருக்கலாம்.ஸ்வாப் பரிசோதனை, ரத்த மாதிரி, எண்டோஸ்கோபி, 24 மணி நேர பி.எச்., அல்லது கட்டிகளுக்கான இமேஜிங் மூலம் தொண்டையில் தொற்று இருப்பதை கண்டறியலாம். எனவே எச்சில் அல்லது உணவை விழுங்குவதில் சிரமம், குரலில் மாற்றம் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்.சைனஸ் தொந்தரவுக்கான சிகிச்சை, பங்கல் சைனஸ் சிகிச்சை, மூக்கின் வழியாக மூளையிலிருந்து வரும் நீரை அடைப்பது, மூளையில் இருக்கும் பிட்யூட்டரி கட்டி மற்றும் கண்களுக்கு அருகில் இருக்கும் கட்டிகள் போன்ற சிகிச்சைகள் மூளை ஓட்டினை திறந்து செய்யப்படுகிறது.இதனால் சிகிச்சை பெறுபவர்கள் பல சிரமங்களுக்கு உள்ளாவர். ஆனால் மூளை ஓட்டினை திறக்காமல் மூக்கின் வழியாக எண்டோஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை செய்யும் போது நோயாளி விரைவில் வீடு திரும்பலாம்.- டாக்டர் பி. மீனா பிரியதர்ஷினி, காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர், மதுரை.ஷர்மி, திண்டுக்கல்: முகத்தில் பருக்கள் நீங்கி தோல் அழகாக மாற வேண்டும். இதற்கு சித்தா அல்லது ஆயுர்வேத முறையில் வழிகள் உள்ளதா?இளம் வயதில் இந்த பிரச்னை இருக்கிறது என்றால் ஹார்மோன் பிரச்னையாக இருக்கலாம்.பொதுவாக பருக்கள் வராமல் தடுக்க மலச்சிக்கல், தலையில் பொடுகு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டும் இருந்தால் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். தோல் நோய்களுக்காக பரங்கிப் பட்டை மாத்திரை, சங்கு மாத்திரைகள் உள்ளன. திரிபலா சூர்ணம் கொண்டு முகத்தைக் கழுவலாம். ஹார்மோன் பிரச்னையால் பருக்கள் ஏற்பட்டிருந்தால் அதற்குரிய சிகிச்சையை டாக்டரை அணுகியே எடுக்க வேண்டும்.டாக்டர் பேச்சி, உதவி சித்த மருத்துவ அலுவலர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திண்டுக்கல்.அழகேஸ்வரி, ராமநாதபுரம்: பார்வை குறைபாடு காரணமாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துகிறேன். சில நாட்களாக லென்ஸ் பயன்படுத்தும் போது கண்கள் அசவுகரியமாக உள்ளது. எதனால் அவ்வாறு உள்ளது?லென்ஸ் நீண்ட நேரம் அணிந்திருப்பது, லென்ஸ் பழையதாகியிருப்பது மற்றும் லென்ஸ் சரியாக பொருத்தாததால் கண்ணின் மேற்பரப்பில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதில் ஏற்படும் தொற்று காரணமாக கண்களில் வலி ஏற்படும். பயன்பாட்டு காலம் முடிந்த பின் வேறு புதிய லென்ஸ் பயன்படுத்த வேண்டும்.லென்ஸ்சை 8 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்திய பின் அதற்கான கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். கண்ணில் பொருத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். கண்களில் உறுத்தல் இருந்தால் தற்காலிகமாக லென்ஸ்க்கு பதிலாக கண்ணாடி பயன்படுத்தவும்.-டாக்டர் எஸ்.ஆனந்தன், துணை பேராசிரியர், கண் மருத்துவப் பிரிவு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை.கவிதா, பழனிசெட்டிபட்டி: கண் வெள்ளை விழியில் எனது மகன் பச்சை குத்தி கொண்டார். தற்போது கண்வீக்கம் ஏற்பட்டு அவதிப்படுகிறார். என்ன செய்ய வேண்டும்?சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் என நினைத்து பலரும் கண் வெள்ளை விழியில் பிடித்த வண்ணங்களை பச்சை குத்துகின்றனர். கண், மிகவும் மென்மையான உறுப்பு. பச்சை குத்துவதால் கண் வீக்கம், வலி, நிரந்தர பார்வை குறைபாடு ஏற்படும். பச்சை குத்தியதால் கண் வீக்கம் ஏற்பட்டால் உடனடியாக கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருந்து கடைகளில் கிடைக்கும் சொட்டு மருந்துகளை வாங்கி பயன்படுத்த கூடாது.டாக்டர் சராயு, கண் சிகிச்சை பிரிவு,அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தேனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்