உள்ளூர் செய்திகள்

தமிழகத்திற்கு ஏழாவது இடம்

தேசிய அளவில் 88 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் தான் நடக்கிறது. ஆனால், 41 சதவீதம் பேர் தான் தாய்ப்பால் தருகின்றனர். தமிழகத்தில் 99 சதவீதம் மருத்துவமனகைளில் பிரசவம் நடக்கிறது. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தல் 60 சதவீதம் மட்டுமே தாய்ப்பால் தரகின்றனர். தேசிய அளவில் நாம் ஏழாவது இடத்தில் உள்ளோம். பல மாநிலங்கள் நம்மைக் காட்டிலும் தாய்ப்பால் தருவதில் முன்னோடியாக உள்ளன. மருத்துவ தொழில்நுட்பம், சிகிச்சையில் முன்னோடியாக இருக்கும் தமிழகம் இந்த விஷயத்தில் பின் தங்கி உள்ளது.நார்மல் டெலிவரியில் பிறந்த குழந்தை, குறைப்பிரசவக் குழந்தை, ஐவிஎப் எனப்படும் செயற்கை கருத்தரிப்பில் பிறந்த குழந்தை, உடல் கோளறுகளுடன் பிறந்த குழந்தை என்று யாராக இருந்தாலும் முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். குழந்தை ஆரோக்கியமாக முழு அறிவுத்திறனுடன் வளர வேண்டும் என்றால், பிறந்தது முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும். முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டும் கொடுத்தால், நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதைத் தடுக்கலாம். பச்சிளங் குழந்தைகளின் இறப்பை தடுக்க இது தான் மிகச் சிறந்த வழி.தாய்ப்பால் தரும் தாய்க்கு மார்பக கேன்சர், கர்ப்பப்பை கேன்சர் வராது என்பது அறிவியல் பூர்வமாக உறுதியான உண்மை.டாக்டர் ஜே.குமுதா,டீன், சவிதா மருத்துவக் கல்லூரி, சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்