உள்ளூர் செய்திகள்

நரம்பு தளர்ச்சிக்கு வெங்காயம் நல்லது

வெங்காயத்தை உரிக்க, உரிக்க ஒன்றும் இருக்காது. ஆனால், அதை உண்பது மூலம் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும்.45 வெங்காயத்தில் சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். சம அளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து, காதில் விட்டால் காதுவலி குறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட்டால், காது இரைச்சல் மறையும். வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினை தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட்டால், மூலக்கோளாறுகளும் நீங்கும்.வெங்காய நெடி, சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்டினால், கட்டிகள் பழுத்து உடையும்.வெங்காயச்சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடித்தால், இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து, பல் ஈறுகளில் தடவி வந்தால் பல்வலி, ஈறுவலி குறையும்.வெங்காயத்தை சமைத்து உண்ண, உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும். வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும். வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், நரம்பு தளர்ச்சி குணமாகும்.திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகர வைத்தால் மூர்ச்சை தெளியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !