உள்ளூர் செய்திகள்

உசர்ட்டாசனா

செய்முறை1. விரிப்பில் வஜ்ராசனத்தில் அமர்ந்து, பிறகு இடுப்பை உயர்த்தி, கைகளை முன்னால் நீட்டியவாறு முட்டி போட வேண்டும2. மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே கைகளை ஒன்றன் பின்ஒன்றாக, தலைக்கு பின்னால் கொண்டு சென்று, உள்ளங்காலை பிடிக்க வேண்டும்3. வலது கை, வலது உள்ளங்காலையும், இடது கை, இடது உள்ளங்காலையும் படத்தில் உள்ளவாறு பிடிக்க வேண்டும்4. தலையை பின்புறமாக கீழ்நோக்கி வைத்திருக்க வேண்டும். அதோடு, நெஞ்சுப் பகுதி நன்கு விரிந்த நிலையில் இருக்க வேண்டும்5. நன்கு மூச்சு இழுத்து விட வேண்டும்6. சிறிது நேரம் கழித்து மெதுவாக கைகளை விலக்கி, பழைய நிலைக்கு வர வேண்டும்.குறிப்புஇரண்டு கைகளாலும் கால்களை பிடிக்க இயலாதவர்கள், ஒவ்வொரு கையால் கால்களை பிடித்து செய்யலாம். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. இதற்கு மாற்று ஆசனமாக சஷங்காசனம் செய்யலாம்.பலன்கள்சளி, இருமல், சுவாச பிரச்னை உள்ளவர்களுக்கு, நுரையீரல் நன்கு இயங்க, இந்த ஆசனம் ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.வாயுப் பிரச்னை சரியாகிறது.இதயம் நன்கு வேலை செய்கிறது.- ரா.சுதாகர், திருமூலர் பிரபஞ்ச யோகா மையம், சென்னை. 97909 11053


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !