உள்ளூர் செய்திகள்

சொர்க்கம் என்பது சுத்தமான வீடு!

சுத்தம் செய்யாத தரையில் கிருமிகள் வாசம் செய்யும் என்பது தெரியும். தரையை கிருமி நாசினி கொண்டு, அவரவர் வசதி, நேரத்திற்கு ஏற்ப சுத்தம் செய்வோம். ஆனால், கொரோனா வைரசின் தாக்கம், சுத்தம் பற்றிய கூடுதல் கவனம், பலரை சித்த பிரமை பிடிக்க செய்து விட்டது. கொரோனா வைரஸ், மற்ற சாமான்களில் 24 மணி நேரமும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பிளாஸ்டிக் பொருட்களில் 72 மணி நேரமும் உயிர் வாழ்கிறது. கிச்சன் மேடை, டைனிங் டேபிள், கதவு கைப்பிடி, லேப்டாப், மொபைல் போன் என்று வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களையும், தினமும் இரு முறை கிருமி நாசினி கொண்டு துடைப்பது அவசியம்.வாஷ் பேசின், பாத்திரம் கழுவும் சிங்க் குழாயில், தண்ணீர் வெளியே செல்லும் இடங்கள் தான் கிருமி உற்பத்தி தொழிற்சாலை. வாரம் இரு முறை, ஒன்றிரண்டு கப் வினிகர் ஊற்றினால் கிருமிகள் அழிந்து விடும்.ஒமைக்ரானை விட அதிக வேகமாக பரவும், புதிய வைரஸ் வர இருப்பதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது. 'ஆன்லைனில்' 'ஆர்டர்' செய்து வாங்கும் பொருட்களை, நேரடியாக வாங்காமல், வெளியில் வைத்து விட்டு, குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து எடுக்கவும். பார்சலை பிரித்த பின், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டியது அவசியம்.- ஆதாரம்: தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !