உள்ளூர் செய்திகள்

பயத்தின் காரணமாக உடல் உபாதை ஏற்படும்!

கர்ப்பிணிகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என, பல கட்ட பரிசோதனைகளுக்கு பின், சமீபத்தில் சொல்லப்பட்டு உள்ளது. 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட துவங்கிய போது, கர்ப்பம் உண்டாகி இருப்பது தெரியாத பலர், தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சில தினங்களில், அவர்களின் கர்ப்பம் உறுதியானது.தொடர்ந்து, அவர்களை மருத்துவ கண்காணிப்பில் வைத்ததில், தடுப்பூசியால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. 'ஸ்கேன்' செய்ததில் குழந்தையும் ஆரோக்கியமாக இருந்தது. பலருக்கு பிரசவம் 'நார்மல்' ஆகவே நடந்தது.வைரஸ் தொற்று குணமான பின், பல வாரங்களுக்கு உடல் சோர்வு உட்பட பல பக்க விளைவுகள் இருக்கிறது. கொரோனா பாதித்த கர்ப்பிணிகள், குழந்தை பெற்றவர்களுக்கும் இது பொருந்தும். கழிப்பறைக்கு செல்லும் நேரங்களில் எதிர்பாராமல், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும் உணர்வு அவ்வப்போது வருவதாக சிலர் கூறுகின்றனர். சிலருக்கு தொடர்ந்து இருமல், ஓய்வாகவே இருக்க வேண்டும் என்ற உணர்வு,போன்றவை இரண்டு மாதங்கள் வரை இருக்கிறது.இப்படி இருப்பவர்களுக்கு, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை போன்ற அடிப்படை பரிசோதனைகள் செய்தால், 'நார்மல்' ஆகவே இருப்பர். தொற்று சரியான பின்னும், இன்னும் பாதிப்பு இருக்குமா என்ற பயத்தின் காரணமாகவே உடல் உபாதைகள் வருகின்றன.மாதவிடாய்கடந்த சில மாதங்களாக மாதவிடாய் வரவில்லை; கொரோனா தடுப்பூசி போட்ட அடுத்த நாள் வந்து விட்டது என்று சொல்கின்றனர். தடுப்பூசிக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 50 வயதிற்கு மேல், தொடர்ந்து ஓராண்டு முழுதும் மாதவிடாய் வரவில்லை என்றால் மட்டுமே, 'மெனோபாஸ்' என்று கருத முடியும்.மாதவிடாய் வராமல் இருந்து, எதிர்பாராமல் வந்தால், வேறு கோளாறுகள் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.டாக்டர் வினுதா அருணாச்சலம்,மூத்த மகப்பேறு மருத்துவர்,அப்பல்லோ மருத்துவமனை, சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்