உள்ளூர் செய்திகள்

போஸ்ட்பார்ட்டம் தெரபி

குழந்தை பெற்றதும், கர்ப்ப காலம் முடிந்து விடுவதாக நினைக்கிறோம்.அப்படி இல்லை. குழந்தை பெற்ற பின், அடுத்த மூன்று மாதங்களுக்கு தாயின் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.நவீன மருத்துவம் இல்லாத காலத்தில், குழந்தை பெற்ற பின், மருத்துவச்சி உதவியுடன் மூலிகை ஒத்தடம், நீராவி குளியல் போன்றவற்றை செய்வது வழக்கம். இதனால், உடலில் இருக்கும் கெட்ட நீர் வெளியேறும்; கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலைக்கு வரும்; இடுப்பெலும்பு பலப்படும்.இந்த தெரபியை செய்யும் போது, குழந்தை பெற்ற பெண்ணின் உடலும், மனமும் விரைவில் இயல்பு நிலைக்கு வரும்.நொச்சி இலை உட்பட சில மூலிகைகளை காய வைத்து பொடித்து, மஸ்லின் துணியில் கட்டித் தருகிறோம். இதை கொதிக்க வைத்து, அதிலிருந்து வரும் ஆவியை நீராவிக் குளியலாக தர வேண்டும். இதற்கான உபகரணங்களையும் நாங்களே தருகிறோம். ரத்த ஓட்டம் சீராவதற்கு அதற்கேற்ற பிசியோதெரபி தருகிறோம்.இதற்காக எங்களிடம் அதிகபட்சம் எட்டு ஆண்டுகள் சித்த, ஆயுர்வேத முறையில் பயிற்சி பெற்ற தெரபிஸ்ட் இருக்கின்றனர். இயல்பாக குழந்தை பெற்றவர்கள், அடுத்த இரண்டாவது நாளிலும், சிசேரியன் செய்திருந்தால், 12 - 14 நாட்கள் கழித்தும் இந்த தெரபியை 40 நாட்கள் செய்யலாம். புதிதாக குழந்தை பெற்ற பெண்களுக்கு மட்டுமல்ல; குழந்தை பெற்ற பின் ஏற்படும் உடல், மன சிக்கல்களை கவனிக்காமல் விட்டவர்களும் ஒரு ஆண்டு, ஐந்து ஆண்டுகள் கழித்தும் செய்து கொள்ளலாம்.நசீமா இஸ்ரத், நிறுவனர், மம்மா கேர் புரோ, சென்னை & 78452 39666 ) mamacareproindia@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்