உள்ளூர் செய்திகள்

கேள்வி - பதில்

ஆனந்த், பெரவள்ளுர், சென்னை: வியர்க்குரு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?தினமும் இருண்டு வேளை தேய்த்துக் குளிக்க வேண்டும். வியர்வை அதிகமாக வருகிறது எனில், மூன்று நான்கு முறைகூட குளிர்ந்த நீரில் குளிக்கலாம். வெயிலில் வெளியே செல்லும் போது, மருத்துவ ஆலோசனைப்படி, சருமத்துக்கு ஏற்ற, 'மாய்ஸ்சரைசர், சன் ஸ்க்ரீன்' போட்டுக் கொள்ள வேண்டும்.தினமும், காலையில் கேரட் ஒன்றை சாப்பிட வேண்டும். 'ஆன்ட்டி ஆக்சிடன்ட், நிறைந்த ஆரஞ்சு, வெள்ளரி, தர்பூசணி பழங்களைச் சாப்பிடலாம். தினமும் ஏதாவது பழச்சாறு அருந்தலாம்.திலோத்தமா, சரும நிபுணர். சென்னை.ரங்கநாதன், குன்றத்தூர், சென்னை: எனக்கு வயது, 58 ஆகிறது. அடிக்கடி பல விஷயங்கள் மறந்து போய்விடுகின்றன. 'அல்சைமர்' நோய் என்று மகன் கேலி செய்கிறான். 'அல்சைமர்' என்றால் என்ன?நம்முடைய நினைவாற்றல் மற்றும் மூளை செயல்திறன் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருவது, 'டிமென்ஷியா' என்ற நிலை. அதற்கு முக்கிய காரணம், 'அல்சைமர்' நோய். நெருக்கடியான விஷயங்களை பார்க்கும்போதோ, பேசும்போதோ குழம்புவது; வார்த்தைகளை மறந்துவிடுவது போன்றவை, 'டிமென்ஷியா' என்ற நிலையின் அறிகுறி. வயது அதிகரிக்கும் போது, மூளையில் சுரக்கும் ரசாயனங்களில் ஏற்படும் மாற்றங்கள், மூளையில் உள்ள நியூரான்களின் செயல் இழப்பு போன்றவையே, 'அல்சைமருக்கு' காரணம். 'அல்சைமரில்' பல நிலைகள் உள்ளன. ஆரம்ப கட்டத்தில், தினமும் செய்யும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட மறந்து போகும். உதாரணமாக, இரவு சாப்பிட்ட உணவு; காலையில் படித்த செய்தி; சந்தித்த நபர்; சென்று வந்த சினிமா போன்ற விஷயங்கள் மறந்துவிடும். அடிக்கடி காரணமில்லாமல் கோபம் வரும். ஒரு கட்டத்தில், 'அல்சைமரின்' தாக்கம் அதிகரிக்கும் போது, கணவன், குழந்தைகள், மனைவி, அம்மா, அப்பா என்று உறவினர்கள், நண்பர்களை கூட மறந்துவிடுவர். அலோசியஸ், முதியோர் சிறப்பு மருத்துவர், சென்னை.ஆர்த்தி, வயலூர், திருநெல்வேலி:எனக்கு வயது 30, ஆகிறது. திடீரென சிறுநீர், தானாக கசிகிறது. என்ன காரணம்?பல பெண்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல், இருந்த இடத்திலேயே சிறுநீர் கசியும் பிரச்னை இருக்கிறது. சுருங்கி விரியும் தன்மை இழத்தல், இளம் வயதிலேயே கர்ப்பப்பை அகற்றுதல், தசைகள் தளர்வடைதல், 'மெனோபாஸ்,' உடல் பருமன், தொடர் இருமல், மலச்சிக்கல், நரம்பு தொடர்பான பிரச்னைகள், நிறைய முறை சுகப்பிரசவம் நடத்தல் போன்ற காரணங்களால், உடலில் அழுத்தம் ஏற்பட்டு, சிறுநீர் கசிவு உருவாகிறது. சிறுவயதிலிருந்து அதிக நேரம் சிறுநீரை அடக்கிப் பழகுவது போன்ற பழக்கங்களாலும், சிறுநீர் கசிவு பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு தகுந்த மருத்துவரை சந்தித்து தீர்வு காணவும்.ஜெயமாலா, மகளிர் நல மருத்துவர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்