உள்ளூர் செய்திகள்

கேள்வி-பதில்

என் அம்மாவுக்கு முழங்கால் மூட்டு விலகி விட்டது; மருத்துவரிடம் காட்டினோம். சில மருந்து, மாத்திரைகளை எழுதிக் கொடுத்து, அத்தோடு தொடர்ந்து, 10 நாட்களுக்கு பிசியோதெரபி செய்ய வேண்டும் என்று கூறினார். முதல் மூன்று நாட்கள் மருத்துவமனைக்குச் சென்று பிசியோதெரபி செய்தோம்; அதன்பின் போக இயலவில்லை. பயிற்சிகளை வீட்டில் இருந்தபடியே செய்யலாமா? அறுவை சிகிச்சை இல்லாமல் இந்த பிரச்னையை தீர்க்க முடியுமா?எம்.சுமதி, திருப்பூர்முழங்கால் மூட்டு விலகுவதற்கு வாய்ப்பு இல்லை. நீங்கள் சொல்வதைப் பார்த்தால், மூட்டுத் தேய்மானமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. தேய்மானம் பிரச்னை என்றால், ஆரம்ப கட்டமாக இருந்தால் மருந்து மாத்திரைகள், பிசியோதெரபி மூலமே குணப்படுத்தலாம். ஆனால் தேய்மானம் எந்த அளவிற்கு உள்ளது என்பதைப் பொறுத்தே, இதை முடிவு செய்ய இயலும். நீங்கள் ஒரு எலும்பு, மூட்டு சிறப்பு மருத்துவரின் ஆலோசனையின்படி எக்ஸ் - ரே எடுத்துப் பாருங்கள். தேய்மானத்தின் அளவை வைத்து என்ன மாதிரியான சிகிச்சை தேவை என்பதை முடிவு செய்யலாம்.டாக்டர் விஜய் சி.போஸ்எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்என் குழந்தைக்கு ஒண்ணரை வயதாகிறது. குழந்தையின் எடை, 13 கிலோ; இது வயதிற்கு ஏற்ற உடல் எடை இல்லை, மிக அதிகம் என்று, பலர் சொல்கின்றனர். தைராய்டு பிரச்னை இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். கைக் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை வருமா? நான் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்?எஸ்.சீதா மகாலட்சுமி, கோவைபிறந்த குழந்தை முதல் எந்த வயதிலும் தைராய்டு பிரச்னை வரலாம். சமீப காலங்களில், தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதைப் பார்க்கிறோம். இந்தப் பிரச்னை இருந்தால், குழந்தை, குழந்தைகளுக்கே உரிய சுறுசுறுப்புடன் இல்லாமல் மந்தமாக இருக்கும். பிறந்தது முதல் ஆறு மாதத்தில் தைராய்டு பிரச்னை இருக்கும் குழந்தைகளின் உடல் எடை குறைந்து இருக்கும்; அதன் பின் உடல் எடை அதிகரித்துவிடும். தைராய்டு பிரச்னையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், முழுமையாக குணப்படுத்தி விடலாம். தைராய்டு பிரச்னையை சிகிச்சை செய்யாமல் வைத்திருந்தால், மூளையின் செயல்படும் திறன் குறைந்து விடும். ஐந்து நாட்கள் தாமதித்தாலும், 5 சதவீதம், ஐ.க்யூ., குறையும். அதனால் நீங்கள் உடனடியாக தைராய்டு பரிசோதனை செய்து, தைராய்டு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உறுதியானால் தாமதிக்காமல் சிகிச்சை செய்ய வேண்டும்.டாக்டர் தீபா ஹரிஹரன்பச்சிளங் குழந்தைகள் சிறப்பு மருத்துவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்