உள்ளூர் செய்திகள்

கேள்வி - பதில்

மாரடைப்பு வருவதற்கான சாத்தியமுள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்? நான் இதைக் கேட்பதற்கு காரணம், பேருந்து ஓட்டுனர் உட்பட, பல்வேறு தரப்பட்ட மனிதர்களும் எதிர்பாராத சமயங்களில் மாரடைப்பு வந்து உயிரிழக்கும் சோகம் நிகழ்கிறது. இதைத் தவிர்க்க வழிகள் ஏதும் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளத்தான். க.சேகர், சென்னைமாரடைப்பு வருவதற்கான அபாயத்தில் இருப்பவர்கள் எப்போதும், 'லோடிங் டோஸ்' (Loading Dose) எனப்படும் மூன்று வகையான மாத்திரைகள் அடங்கிய சிறிய பவுச்சை பாக்கெட்டில் வைத்திருக்க வேண்டும். ஒரு பாக்கெட்டில், 3 விதமான மாத்திரைகள் இருக்கும். அவை உயிர் காக்கும் மாத்திரைகள். மூன்று மாத்திரைகளும் சேர்த்து, விலை வெறும், 40 ரூபாய் தான்! டிஸ்பிரின் (Desprin 350 mg), அட்டோர்வாசேடின் (Atorvastatin 80mg), கிளோபிடேப் (Clopitab150 mg 2 மாத்திரைகள்), இந்த மூன்றும் சேர்ந்ததுதான் உயிர் காக்கும் மாத்திரைகள், லோடிங் டோஸ்.எதிர்பாராத நேரத்தில் ஒருவருக்கு நெஞ்சுவலி வருகிறது. 'ஹார்ட் அட்டாக்கி'ற்கான அறிகுறிகள் அனைத்தும் இருக்கின்றன, டாக்டரைப் பார்ப்பதற்கு, 2 மணி நேரம் ஆகும் என்ற சூழலில், இந்த மாத்திரைகள் கைவசம் இருந்தால் உடனடியாக சாப்பிடலாம். பேருந்து, ரயில், விமானப் பயணத்தின்போது, எதிர்பாராமல் வலி வந்துவிட்டால், இந்த லோடிங் டோசைப் போட்டுக் கொள்ளலாம். புகைப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, மன அழுத்தம் உள்ளவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நாங்கள் ஒன்றும் டாக்டர் இல்லையே, அறிகுறிகளை வைத்து, 'ஹார்ட் அட்டாக்'தான் என்று எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்டால், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது; ரத்த அழுத்தம் இருக்கிறது; சிகரெட் பழக்கம் உள்ளது 40 வயதுக்கு மேல் ஆனவர் என்றால், உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்பு, 100 சதவீதம் உள்ளது. வாயுத் தொல்லை, அல்சர் பிரச்னை இருப்பவர்களுக்கு இதுபோன்ற வலி வந்தால், ஆன்டாசிட் மாத்திரைகளைப் போட்ட பின், இந்த மாத்திரைகளை சாப்பிடலாம். டாக்டரைப் பார்த்து சிகிச்சை பெறும் வரையிலும், இந்த மாத்திரைகள் உங்களைக் காப்பாற்றும். எந்தவிதப் பக்க விளைவுகளும் இருக்காது. உயிர் காக்கும் இந்த மாத்திரைகளை, அமெரிக்காவில் அனைவரும் அடையாள அட்டை போல பாக்கெட்டில் வைத்திருப்பர். நீங்களும் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இல்லாவிட்டாலும், பக்கத்தில் இருக்கும் யாருக்காவது பயன்படலாம். ஹார்ட் அட்டாக் வருவதற்கான சாத்தியக் கூறு இருப்பவர்கள், உங்கள் டாக்டரிடம் ஆலோசனை பெற்று, இந்த மாத்திரைகளை எப்போதும் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.டாக்டர் ஜி.பக்தவச்சலம், கே.ஜி.மருத்துவமனை, கோவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்