கேள்வி - பதில்
டயாபடிக் நியூரோபதி பாதிப்பு எனக்கு இருக்கிறது என்கிறார், மருத்துவர். இதன் பாதிப்புகளை விளக்குங்களேன்?தா.சுப்ரமணியன், திருநின்றவூர்நீரிழிவு நோயாளிகளுக்கு வரக்கூடிய, நரம்பு தொடர்பான பிரச்னைக்கு பெயர் தான், டயாபடீக் நியூரோபதி. நாள்பட்ட நீரிழிவு தொடரும் போது, நரம்பு இழைகள் மற்றும் ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, அது நரம்புகளின் தகவல் பரிமாற்ற வேலையை பாதிக்கிறது. டயாபடிக் நியூரோபதி பிரச்னையால், சிறுநீரகம் பாதிக்கப்படும் போது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் பாதிப்பு ஏற்படுகிறது. இப்படி உடலில் தங்கும் நச்சுக்களால், நரம்புகள் பெரிதும் பாதிப்படைகின்றன.பெரி பெரல் நியூரோபதி, ஆடாடானமிக் நியூரோபதி, பராக்சிமல் நியூரோபதி, போகல் நியூரோபதி என, நான்கு வகைகள் உள்ளன.அறிகுறிகள்?: கால் மரத்துப் போகும், கால் பாதங்களில் ஊசி குத்தும் உணர்வு, பாதம் மென்மையான பொருள் மீது நடப்பது போல் இருக்கும், காலில் ஏதாவது பொருள் குத்தினால் கூட உணர்வு இருக்காது, வலிக்காது, நோய்த் தொற்று ஏற்பட்டு காலில் புண் வரும். நரம்புகள் பாதிக்கப்படுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்தால் கூட, இவர்களால் கண்டறிய முடியாது. வராமல் தடுப்பதை தள்ளிப் போடலாமே தவிர, தடுக்க வழியில்லை. மது, புகை பழக்கத்தை கைவிடுவது, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பது தான் இதற்கு தீர்வு.உணவுக்கட்டுப்பாடு: வெள்ளை நிற உணவுகளான அரிசி, மைதா, சர்க்கரை இவற்றை தவிர்க்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடாதவாறு, அன்றாட உணவை சமச்சீராக எடுத்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு அட்டவணையை பின்பற்ற வேண்டும். இதோடு தினமும் உடற்பயிற்சியும் அவசியம். மருத்துவரின் பரிந்துரையின்படி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.தடுக்கும் வழிமுறைகள்?: வராமல் தடுப்பதை தள்ளிப் போடலாமே தவிர, தடுக்க வழியில்லை. மது, புகைப் பழக்கத்தை கைவிடுவது, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது, ரத்தத்தில், சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பது தான் இதற்கு தீர்வு.கே.பரணிதரன்பொது மருத்துவர் மற்றும் நீரிழிவு சிறப்பு நிபுணர்