கேள்வி பதில்:
எனது வயது 32. எனது பெற்றோர் இருவருக்கும் பை-பாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. எனக்கும் இதய நோய் வர வாய்ப்புள்ளதா? எஸ். நடராஜன், பரமக்குடி
பெற்றோருக்கு இதய நோய் இருப்பதால், உங்களுக்கும் அது வரும் தன்மை அதிகமாகவே உள்ளது. எனவே, நீங்கள் இப்போது இருந்தே வாழ்க்கை முறையை தீவிரமாக மாற்றி அமைக்க வேண்டும். உணவில் உப்பு, எண்ணெய், சர்க்கரையை குறைத்து, காய்கறி, பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். பொரித்த தின்பண்டத்தை அறவே நீக்க வேண்டும். மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வது அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இத்துடன் உங்கள் ரத்தஅழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதித்து, சீராக உள்ளதா என்று அறிந்து கொள்வது முக்கியம். ரத்தத்தில் எல்.டி.எல்.,ன் அளவு 100 மி.கி.,க்கு கீழ் இருப்பது மிகமுக்கியம்.
டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை