உள்ளூர் செய்திகள்

வாசகர் கடிதம்

விரல்களின் அமைப்பில் பொதிந்துள்ள, வாழ்வியல் உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நாயகி தினமலருக்கு நன்றி!-ஏ.முருகேஸ்வரி, சிவகங்கை**'விறகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்விரல்கள் நிறைய மோதிரம் வேண்டும்அரையதனில் பஞ்சென்றும் பட்டென்றும் வேண்டும்அவர் கவிதை நஞ்சேனும் வேம்பேனும் நன்றோ...'என, அவ்வை பாடியது போல், அந்தஸ்தையும் - பதவியையும் பறைசாற்றவும், மோதிரம் தேவை என்று நினைத்தேன். ஆனால், நாயகியின் கட்டுரை படித்த பின்பு தான், 'அடடா மோதிரம் அணிய இவ்வளவு விஞ்ஞான விஷயங்களா!' என்று வியந்து போனேன். செய்தியை பார்த்து மட்டுமல்ல; நாயகி, இதை எந்த தொல்பொருள் ஆராய்ச்சியில் இருந்து தோண்டி எடுத்து வருகிறார் என்றும் மலைத்தேன்.-கு.பெருமாள் தேவி, மவுலிவாக்கம்**மோதிரம் போடுவதன் ரகசியம் பற்றிய செய்தி படித்து வியந்தேன். இது மாதிரியான புதுமையான படைப்புகளை வெளியிடுவதில், தினமலருக்கு நிகர் தினமலரே!எப்படித்தான் யோசிக்கிறீங்களோ!- மாலதி கண்ணன், வத்தலக்குண்டு**மருத்துவ பரிசோதனையை தவிர்க்க வேண்டியதில்லை. தேவை என கருதினால், சின்ன சந்தேகம் ஏற்பட்டு விட்டால் கூட கவுரவமோ, தகுதி குறைவாகவோ நினைக்காமல், உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றே என் அனுபவத்தில் கூறுகின்றேன்.என் சக டாக்டர் அவரின் உறவினர் அவரும் மருத்துவர். விரும்பி திருமணம் செய்து கொண்டார். மறுநாளே உடலில் ஆங்காங்கே வெள்ளை புள்ளிகள் இருப்பதாக கூறி பிரிந்து விட்டனர். கடந்த ஒரு ஆண்டாக விவாகரத்து, கோர்ட், கேஸ் என, அலைந்து கொண்டிருக்கின்றனர்.உறவினர், விருப்பம், படிப்பு, பதவி எல்லாம் இருந்தும், ஒரு மருத்துவ பரிசோதனை செய்திருந்தால் இரண்டு மருத்துவர்கள் இன்று இவ்வளவு அவஸ்தை பட வேண்டியிருக்காது.- டாக்டர் சத்திய நாராயணன்ஸ்ரீவில்லிபுத்துார்**இனிய நடையில் இலக்கிய ரீதியில் காற்சிலம்பு குறித்து புள்ளி விவர அறிக்கை, வைத்தீஸ்வரியின் கை வண்ணத்தில் ஒளி வீசிற்று. தாம்பத்ய வாழ்வில் மனம் திறந்து பேசி மன உளைச்சல் தவிர்த்து இன்பம் துய்த்திட வான்மதியின் கட்டுரை வழி காட்டியது.- சுப.உஷாராணி,மறைமலை நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !