எலும்புகள் மென்மையாகும் அபாயம்!
உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகள் நல டாக்டர்கள் கவலையுடன் தெரிவிப்பது, ஊரடங்கு அமலில் இருந்த கடந்த இரண்டு ஆண்டுகளில், குழந்தைகள் அதிக அளவில் 'ரிக்கெட்ஸ்' கோளாறால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது தான்.இதற்கு காரணம், சூரிய ஒளியில் இருந்து பிரதானமாகக் கிடைக்கும் 'வைட்டமின் - டி' குறைபாடு. சூரிய ஒளி தவிர மீன், முட்டை பொருட்களில் வைட்டமின் - டி உள்ளது. பல மாதங்களாக குழந்தைகள் வெளியில் விளையாடச் செல்லவில்லை; இருந்த இடத்தில் அமர்ந்து மொபைல் போன் பார்க்கின்றனர்.வைட்டமின் - டி குறைபாடு இருந்தால், எலும்புகள் மென்மையாகி, ஆரோக்கியமான வளர்ச்சி இல்லாமல் இருக்கும். மும்பை, டில்லி, சென்னையில் இக்குறைபாடு அதிக அளவில் தெரிய துவங்கி உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, அடுத்த சில மாதங்களில் இதே பிரச்னை இருப்பது தெரியலாம்.- பீடியாட்ரிஷியன் இதழ்