உள்ளூர் செய்திகள்

துரித உணவகத்தால் தோள்பட்டை வலியா?

செல்லப்பா, கும்பகோணம்: 52 வயதான எனக்கு, பணியின் காரணமாக அதிக பயணம் செய்து, துரித உணவகத்தில் சாப்பிடுகிறேன். எனது தோள்பட்டையில், 2 மாதங்களாக வலி உள்ளது. துரித உணவகங்களில் உண்டபின், தோள்பட்டை வலி வருவதற்கு என்ன காரணம்?நீங்கள், உங்கள் தோள்மூட்டினை நன்றாக வலியின்றி அசைக்க முடிகிறதா என பார்க்கவும். நன்றாக அசைக்க முடிந்தால், வலியின் காரணம் தோள்மூட்டு கிடையாது. உணவு உண்டபின் வலி உண்டாகிறது என்றால், அதற்கு காரணம், வயிறு மற்றும் குடல் பிரச்னை அல்லது இருதய பிரச்னையாக இருக்கும். துரித உணவு உட்கொள்ளும் பழக்கம் நல்லதல்ல. மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !