உள்ளூர் செய்திகள்

இதய பிரச்னையால் தோள்பட்டை வலியா?

எனக்கு 2 ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்தம் உள்ளது. அம்லோடிபின் 5 மி.கி., மருந்தை தொடர்ந்து எடுத்து வருகிறேன். ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது கால்களில் வீக்கம் ஏற்படுகிறதே, எதனால்?உயர்ரத்த அழுத்தத்திற்கு அம்லோடிபின் மிகச்சிறந்த மருந்துதான். இருப்பினும் மிகச் சிலருக்கு இம்மருந்தால், கால்வீக்கம், மலச்சிக்கல் ஏற்படலாம். எனவே, உங்கள் டாக்டரை சந்தித்து, அம்லோடிபின் மருந்துக்குப் பதிலாக, வேறு ரத்த அழுத்த மருந்தை எடுக்கலாம். தற்போது உயர்ரத்த அழுத்தத்திற்கு பக்கவிளைவு இல்லாத மிகச்சிறந்த மருந்துகள் இருக்கின்றன. அம்லோடிபினை நிறுத்திய பின்னும், உங்களுக்கு கால்வீக்கம் தொடர்ந்தால், ரத்தம், சிறுநீர், தைராய்டு, வயிற்று ஸ்கேன், எக்கோ பரிசோதனைகள் தேவைப்படும்.எனக்கு 4 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக, மூன்று வகை மருந்துகள் எடுத்து வருகிறேன். பரிசோதனையில் எனக்கு HbA1c அளவு 8.5 என வந்துள்ளது. இது சரியான அளவுதானா?HbA1c என்பது 'ஹீமோகுளோபினை' (Hb) குறிக்கிறது. இது சர்க்கரை நோய் உள்ளவர்களின் 3 மாதங்களில் ரத்தத்தில் சர்க்கரை அளவின் கட்டுப்பாட்டைக் குறிக்கும் ஓர் அளவாகும். இது சர்க்கரை நோயாளிக்கு 6.5 என்ற அளவுக்கு கீழ் இருப்பதுதான் சிறந்தது. உங்களுக்கு 8.5 என இருப்பது அதிகம்தான். உங்கள் உணவுப் பழக்கம், நடைப்பயிற்சி ஆகியவற்றை முறைப்படுத்தி, சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவசியம். நீங்கள் எடுக்கும் சர்க்கரைமருந்துகளை மாற்றி அமைத்தாக வேண்டும்.எனக்கு வலது தோள்பட்டையில் அவ்வப்போது வலி ஏற்படுகிறது. இதற்கு இதய பரிசோதனை தேவையா?தோள்பட்டையில் ஏற்படும் வலியை அலட்சியப் படுத்த கூடாது. உங்களுக்கு அவசியம் எக்கோ, டிரெட்மில் பரிசோதனைகள் தேவை. இவற்றின் முடிவுகள் நார்மலாக இருந்தால், எலும்பு, நரம்பு மற்றும் தசை சார்ந்த வலியாக இருக்கக் கூடும். மாறாக, இவ்விரு சோதனைகளிலும் கோளாறு இருந்தால், அதற்கு ஏற்ப சிகிச்சை முறை அமையும்.டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !