உள்ளூர் செய்திகள்

நினைவு திறனை மேம்படுத்தும் தூக்கம்!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். அதே நேரம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பெரிய அளவில் மாற்றங்கள் செய்ய வேண்டியதில்லை. சிறிய மாற்றங்கள் கூட மிகப்பெரிய வித்தியாசங்களை கொண்டு வரும்.சமச்சீரான, ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றினாலே, உடல் எடையை 80 சதவீதம் கட்டுக்குள் வைக்கலாம். அன்றாட உணவு முறை சமச்சீரான ஊட்டச்சத்து மிக்கதாக இருந்தால், இதய நோய், நீரிழிவு, சில வகை கேன்சர் பாதிப்புகளை குறைக்கவும் உதவும். தினசரி உணவில் பழங்கள், காய்கறிகள், கீரைகள், பல வண்ணங்கள் அடங்கிய காய்கறிகள், மெலிந்த புரதங்கள், முழு தானியங்கள் போன்றவற்றை திட்டமிட்டு எடுத்துகொள்ள வேண்டும். இதய நோய் அபாயத்தை குறைப்பதற்கு, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஆயுட்காலம் அதிகரிப்பதற்கு வாரத்தில் 5 நாட்கள் என நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் மிதமான உடல்பயிற்சி செய்ய வேண்டும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் பரிந்துரைக்கின்றன. தீவிரமான உடல்பயிற்சி தான் என்று இல்லாமல் சைக்கிள் ஓட்டுவது, நடைபயிற்சி, யோகா என எந்த பயிற்சி வேண்டுமானாலும் செய்யலாம். உடல் செயல்பாடு சீராக இருக்க போதுமான நீர்ச்த்து தேவை. நாள் ஒன்றுக்கு எட்டு -10 டம்ளர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். துாக்கம் என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுக்குமே தேவை. தினசரி ஏழு - எட்டு மணி நேரம் வரை கண்டிப்பாக துாங்க வேண்டும்.நேஷனல் ஸ்லீப் பவுண்டேஷன் செய்த ஆய்வில், போதுமான துாக்கம் இருந்தால் தான், நினைவுத்திறன் மேம்படும்; நோயெதிர்ப்பு அதிகரிக்கும்; உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவும் என்று தெரிய வந்துள்ளது. ஆழ்ந்த துாக்கத்திறகு தினமும் குறிப்பிட்ட நேரத்தில் துாங்கி, குறிப்பிட்ட நேரத்தில் விழிக்க வேண்டும்.மன அழுத்தம் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. தியானம், யோகா, புத்தகம் படிப்பது மன அழுத்தம் இல்லாமல் இருக்க உதவும்.நாள்பட்ட மன அழுத்தம் இதய நோய், கோளாறுகள், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றை உண்டு பண்ணும்.டாக்டர் ஸ்பூர்த்தி அருண்,பொதுநல மருத்துவர்,புரோமெட் மருத்துவமனை, சென்னை94807 94807contact@promedhospitals.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்