உள்ளூர் செய்திகள்

3 அடி தள்ளியே நில்லுங்கள்

கொரோனா வைரசால், இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை, 3,000. பைக் விபத்துகளில், குறிப்பாக, 'ஹெல்மெட்' போடாமல், பைக் விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை, ஆண்டிற்கு, 3 லட்சம் பேர். நாம் கொரோனா பற்றி பயப்பட வேண்டுமா அல்லது ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டுபவர்கள் பற்றி பேச வேண்டுமா? யோசிக்க வேண்டும்.கடந்த, 2002ல், சீனாவில் இருந்து, 'சார்ஸ்' வைரஸ் பரவியது. இதுவும் கொரோனாவை போலவே, சுவாச மண்டலத்தை தாக்கும் கிருமி தான். இதில், இறப்பு விகிதம், 10 சதவீதமாக இருந்தது. 2014ல், சவுதி அரேபியாவில் இருந்து, 'மெர்ஸ்' என்ற வைரஸ் பரவியது.இதில் இறப்பு விகிதம், 37 சதவீதமாக இருந்தது. இதுவும் கொரோனாவை போன்றதே. ஆனால், தற்போது உள்ள புள்ளி விபரங்களின் படி பார்த்தால், கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் வெறும், 2 - 4 சதவீதம் தான்.தகவல் தொடர்பு தொழில்நுட்ப யுகத்தில் இருப்பதால், இதைப் பற்றிய தகவல்கள் வேகமாக பரவி, அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. கொரோனா குறித்து, கவனமாக இருக்க வேண்டுமே தவிர, கொரோனா பற்றிய பயத்தை, பதற்றத்தை முதலில் தவிருங்கள்.

கை கழுவுங்கள்

எல்லா வைரஸ் கிருமிகளையும் போன்றதே இதுவும். கொரோனா பாதிப்பு இருப்பவர்கள் தும்மினால், இருமினால், தெறிக்கும் நீர்த் திவலைகள் வழியே, மற்றவர்களுக்கும் பரவக் கூடியது. குறிப்பாக, சுவாச மண்டலத்தை தாக்கக் கூடிய வைரஸ் இது.எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் முதியவர்கள், குழந்தைகள், ரத்த சர்க்கரை அளவு அதிகம் இருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு, வைரஸ் தொற்று பரவக்கூடிய அபாயம் அதிகம்.கை கழுவுவது, எல்லா நேரத்திலும் மிகவும் முக்கியம். தொற்று பரவும் காலங்களில், 20 வினாடிகள் கை கழுவ வேண்டும். தும்மும் போது, இருமல் வரும் போது, மூக்கையும், வாயையும் மூடி தும்ம வேண்டும். சளி, இருமல் இருப்பவர்களிடம் இருந்து, 3 அடி துாரம் தள்ளி இருப்பது, நமக்கும், அவர்களுக்கும் நல்லது. ஒருவர் தும்மும் போது, அவர் வாயிலாக வெளிப்படும் வைரஸ், 3 அடி துாரத்திற்கு பரவும். கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கலாம்.

தர்பூசணி

தர்பூசணி சுவையான பழம் மட்டும் கிடையாது. அதில், 'லைக்போபின்' என்ற பொருள் உள்ளது. இது, மரபணுவை பாதுகாக்கும். 'வைட்டமின் ஏ, சி' போன்ற, கண்களுக்கு, மூட்டுக்களுக்கு தேவையான வைட்டமின்களும் உள்ளன. தவிர, ஆர்ஜினைன் என்ற, 'அமினோ' அமிலம் உள்ளது. இது, இயற்கையாகவே, நைட்ரிக் அமிலமாக மாறி, எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். தர்பூசணியில், 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இது கோடைக் காலத்தில், உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும்.சிக்கன்அசைவ உணவுகளால், கொரோனா பரவுகிறது என, சொல்வதற்கு, எந்த ஆதாரமும் இல்லை. பொதுவாக, அசைவ உணவுகளை நன்கு சமைத்து சாப்பிட்டால், எந்த வைரஸ் கிருமியும் பரவுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.டாக்டர் அஸ்வின் விஜய்பொதுநல மருத்துவர், சென்னை90943 20777


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !