நரம்பு செல்களை துாண்டும், ஸ்டெபிலைசர்!
மூளை நரம்பு செல்கள் சிதைவடைவதால் ஏற்படும் பார்க்கின்சன்ஸ் நோய் பற்றி, அனைவரும் அறிந்தது தான் என்றாலும், பார்க்கின்சன்ஸ் பாதிப்பு வருமா என்பதை, சில அறிகுறிகளை வைத்து, பல ஆண்டுகளுக்கு முன்பே கணிக்க முடியும் . எப்படி? ஆரோக்கியமாக இருந்த ஒருவரின் செயல்திறன், எதிர்பாராமல் குறைவது, கைகள் விறைப்பாவது, கைகளில் நடுக்கம், 'பேலன்ஸ்' எனப்படும் உடலின் சமநிலை பாதிக் கப்படுவது, ருசி மாறுவது என அடுக்கலாம். பல ஆண்டுகளாக சுவை மாறாமல் சமையல் செய்பவர்களுக்கு, வழக்கமான ருசி மாறிவிடும். காரணம், வாசனையை நுகரும் தன்மையை இழந்திருப்பர். இரவில் துாங்கும் போது, துாக்கத்தில் வரும் கனவு களை நிஜமாக நடப்பதாக நினைத்து, கத்துவது, அடிப்பது, உதைப்பது என்று, 'ரியாக்ட்' செய்வர். மற்ற அறிகுறிகள் தெரிவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே, கனவுகளுக்கு ஏற்ப வெளிப்படும் உடல் அசைவுகள் ஆரம்பித்து விடும். இதை, 'ரெம் ஸ்லீப் பிஹேவியரல் டிசாடர்' என்று சொல்லுவோம். இது போன்ற அறிகுறிகள் இருந்தால், எதிர்காலத்தில் இவ ர்களுக்கு பார்க்கின் சன்ஸ் வரலாம் என்று எதிர்பார்க்கலாம். பார்க்கின்சன்ஸ் நோயில், பல வகைகள் உள்ளன. இந்நோய் இருப்பது உறுதியான நான்கு வருடங்களில், எந்த வகை என்று தெரிந்துவிடும். அதில் ஒன்று தான, 'இடியோபதிக் பார்க்கின் சன்ஸ்' எனப்படும், காரணம் தெரியாமல் வரும் பார்க்கின்சன்ஸ். இவ்வகை கோளாறுக்கு தற்போது நடைமுறையில் உள்ள மருந்துகள், முதல் ஐந்தாறு ஆண்டுகளுக்கு நல்ல பலன் தரும். அதன் பின், மருந்தின் வீரியம் குறையவோ, அதிகரிக் கவோ செய்யும். எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டிய ஒரு 'டோஸ்' மருந்து, இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே பலன் தரும். மருந்து சாப்பிட்டதும், அறிகுறிகள் குறைந்து, இயல்பாக இருப்பவர்கள், அடுத்த ஓரிரு மணி நேரத் திற்குள்ளாகவே, நடக்க சிரமப்படுவர்; எந்த வேலையும் செய்ய முடியாமல் தடுமாறுவர். சிலருக்கு இயல்புக்கு அதிகமாக மருந்து வேலை செய்வதால், ஓய்வாக அமர்ந்திருக்கும் போதும், கழுத்து, கைகள், கால்கள் அசைந்து கொண்டே இருக்கும். டீப் பிரெய்ன் ஸ்டிமுலேஷன் மருந்துகள் பலன் தராது என்ற நிலையில், மூளை நரம்புகளை மின் அதிர்வுகள் உதவியுடன் இயல்பாக செயல்பட வைக்கும் முறைதான், டீப் பிரெய்ன் ஸ்டிமுலேஷன். மூளையைச் சுற்றியுள்ள கனமான மண்டை ஓட்டில், சிறிய துளையிட்டு, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் உதவியுடன், சிதைந்த நரம்பு செல்கள் உள்ள பகுதியை கண்டறிந்து, அவற்றை துாண்ட, மின் முனை 'சிப்' பொருத்தப்படும். இதை வெளியில் இருந்து பேட்டரி வாயிலாக இயக்க வேண்டும். இதிலிருந்து, சீராக மின் அலைகள் மூளையின் நரம்பு செல்களை துாண்டும் போது, மின்சாரத்தை சீராக தரும், 'ஸடெபிலைசர்' மாதிரி மூளை செல்களால் இயல்பாக செயல்பட முடியும். இது, நோயை குணப்படுத்தும் கருவி கிடையாது. நோயினால் ஏற்படும் அறிகுறிகளை குறைத்து, சீராக செயல்பட வைக்கும் முறை. பார்க்கின்சன்ஸ் தவிர... சிறிய வயதிலேயே, 'டிஸ்ட்டோனியா' என்ற மர பணு இருந்தால், கை, கால்கள் அசாதாரணமாக இருக்கும். கட்டுப்பாடில்லாத வலிப்பு நோய்கள், தீவிர மனநல பாதிப்புகளுக்கு, இச்சிகிச்சை செய்தால் இயல்பாவதற்கான வாய்ப்புகள் அதிகம். டாக்டர் வெங்கட்ராமன் கார்த்திகேயன், மூத்த நரம்பியல் ஆலோசகர், காவேரி மருத்துவமனை, சென்னை.044 4000 6000, 80560 02444info@kauveryhospitals.com