கனவு தவிர்... நிஜமாய் நில்!
டீன் ஏஜ்பதிமூன்று வயதில் ஆரம்பிக்கிறது, டீன் ஏஜ். குழந்தையாகவும் இல்லாமல், வளர்ந்த பெண்ணாகவும் இல்லாமல் இருக்கும் இரண்டுங்கெட்டான் பருவம். இந்தப் பருவத்தில், உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். பார்ப்பதற்கு வளர்ந்த பெண்ணாக தோன்றினாலும், மனம் வளர்ந்திருக்காது. இந்தப் பருவத்தில் உடலைப் பற்றிதான் அதிக கவனம் செய்யத் தோன்றும். 'ஈட்டிங் டிஸ்சாடர்'ஒல்லியாக இருந்தால், 'குண்டாகணும்' என்ற கவலை; குண்டாக இருந்தால், 'ஒல்லியாகணும்' என்ற கவலை. ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதற்காக, காலை உணவைத் தவிர்ப்பது, வெறும் ஜூஸ் மட்டும் குடிப்பது என, விடலைப் பருவத்தினர் தவறு செய்கின்றனர்.வெயிட் அதிகம் என்றால், காலையில் எதுவும் சாப்பிடுவதில்லை. இன்னொருபுறம், வெளியில் நண்பர்களோடு போகும்போது, பீட்சா, பர்கர், ஐஸ்கிரீம் என்று அதிக கொழுப்பு, சர்க்கரை உள்ள உணவுகளை சாப்பிடுகின்றனர். பின், 'அதிக கலோரி சாப்பிட்டு விட்டோமே' என, பல மணி நேரம் சாப்பிடாமல் இருக்கின்றனர். டீன் ஏஜ் குழந்தைகளின் கைகளில் இருக்கும் ஸ்மார்ட் போன், அடுத்த வில்லன். நெருங்கிய தோழியர், தெரிந்த, தெரியாத நபர்கள் என, யாராக இருந்தாலும், முகநூலில் தான் முகம் பார்க்கின்றனர்.குழந்தையின் இயல்பு, ஒரு இடத்தில் நிற்காமல் ஓடியாடுவது. ஆனால், வீடியோ கேம் போல ஏதாவது ஒன்றை கையில் கொடுத்து, ஒரே இடத்தில் உட்கார பெற்றோரே பழக்கி விடும் சூழல் தான் உள்ளது. இது டீன் ஏஜ்ஜிலும் தொடர்கிறது.விளையாடுவதே இல்லை. விளைவு, போதிய சூரிய ஒளி உடம்பில் படாமல் வைட்டமின் - டி குறைபாடு, வியர்வை சிந்தி விளையாடாததால் டைப் - 2 நீரிழிவு, மூட்டு வலி, தைராய்டு என், வயதானவர்களுக்கு வரும் அனைத்து உடல் பிரச்னைகளும், டீன் ஏஜ் பெண்களுக்கும் வந்துவிடுகிறது. இன்னொரு பக்கத்தில் மதிப்பெண் குறித்த அழுத்தம்! ஊட்டச்சத்து அதிகம் உள்ள காலை உணவை சாப்பிட வேண்டும். குறைந்தது, ஒரு டம்ளர் பாலாவது குடித்துவிட்டே, ஸ்கூலுக்கு போக வேண்டும். அதிக உதிரப்போக்கு இருக்கும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவோடு, இரும்புச் சத்து மாத்திரை கொடுக்க வேண்டும். வெளியில் உணவு ஆர்டர் செய்யும்போதும், சத்தான உணவுகளை வாங்கித் தர வேண்டும். 5 வயதில் சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி, தட்டம்மை, ருபெல்லா (எம்.எம்.ஆர்.,) தடுப்பு ஊசி, போடாவிட்டால், இந்தப் பருவத்தில் போட்டு விட வேண்டும்.குளிர் காய்ச்சலுக்கான நோய் தடுப்பு ஊசியையும், ஆண்டிற்கு ஒருமுறை போடுவது நல்லது.டாக்டர் தீபா ஹரிஹரன்குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், சென்னை