உள்ளூர் செய்திகள்

சர்க்கரையா... கவனமுங்க!

சர்க்கரை நோயாளிகள் எப்போதும் தங்களை குறித்த முகவரி, போன் எண், அவசரத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் போன் எண், சர்க்கரை நோய்க்கு எடுத்து வரும் சிகிச்சை உள்ளிட்ட விபரங்களை, ஒரு அட்டையில் எழுதி பத்திரமாக கைப்பை அல்லது பர்சில் வைத்திருக்க வேண்டும்.எப்போதும் குளுக்கோஸ் அல்லது ஏதாவது இனிப்புகளை எடுத்துச் செல்லவும். ரத்தத்தில் சர்க்கரை குறைவை தடுக்கவும் அல்லது சிகிச்சைக்கும் பயன்படும். உடற்பயிற்சி செய்யும் போது தேவையான அளவு தண்ணீரை குடிக்கவும். உடற்பயிற்சி செய்யும்போது கால்கள் அல்லது மார்பு வலி ஏற்படுவதை உணர்ந்தால் உடற்பயிற்சி செய்வதை உடனடியாக நிறுத்தி விட்டு டாக்டரை தொடர்பு கொள்ளவும். வெறும் வயிற்றில் இரத்த சர்க்கரை அளவு 300 மிகி மேலாகவோ அல்லது 70 மிகி குறைவாகவோ இருந்தால் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !