பல் ஆடுகிறதே?
கே.மாலினி, ஈஞ்சம்பாக்கம், சென்னை: என் வயது 40. சர்க்கரை நோய் உள்ளது. ஈறுகள் பலமின்றி இருப்பது போல உள்ளது. பற்கள் சிறிது ஆட்டத்துடன் உள்ளன.சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம். சர்க்கரை அளவு கூடும்போது, ஈறுகளில் கிருமிகளின் அளவு கூடும். இதனால், ஈறுகளில் பாதிப்பு உண்டாகும். பற்களை சுற்றி காரைபடியும்போது, ஈறுகளை அழுத்தி பற்களுக்கும், ஈறுகளுக்கும் நடுவில் இடைவெளியை உருவாக்குகிறது. பல் சிகிச்சை நிபுணரிடம் காண்பிக்க வேண்டும்.