உள்ளூர் செய்திகள்

பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்

பக்கவாத நோய் என்றால் என்ன?மூளைக்கு செல்லும் பெரு, சிறு ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் குறைதல் மற்றும் தடைபடுதல் மட்டுமில்லாமல் பிராண வாயு, ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது தடைபட்டு, மூளையின் சில பாகங்கள் செயல் இழந்து, உடலின் சில பாகங்களும் செயல் இழக்கின்றன. இதை, பக்கவாதம் என்கிறோம். ஹார்ட் அட்டாக் போன்று, இதை, ப்ரைன் அட்டாக் எனலாம்.பக்கவாதத்தில் வகைகள் உண்டா?ஆம், இரண்டு வகை உண்டு. ஒன்று மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் அடைப்பினால் ஏற்படுவது. மற்றொன்று, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டால் வருவது. மூளையின் செயல்பாடுகள் எதனால் பாதிக்கப்படுகிறது?மூளையின் செயல்பாடு என்பது, பிராணவாயு மற்றும் ரத்த ஓட்டத்தை சார்ந்தே இருக்கிறது; இவை, இரண்டில் எது தடைபட்டாலும் மூளை செயலிழக்கிறது.பக்கவாதம் நிரந்தர பிரச்னையா?சில சமயம் தற்காலிகமாக இருக்கலாம். அதாவது குணப்படுத்தக் கூடிய பக்கவாதம். ஆனால், இதே பக்கவாதம், சில சமயங்களில் நிரந்தர பிரச்னையாகவும் மாறலாம்.பக்கவாதம் வருவதை எவ்வாறு அறிவது?முகம், கை, கால்கள் இவற்றில் ஏதேனும் மாற்றம் தெரியும். மேற்சொன்ன உறுப்புகளில் செயல்திறன் குறைந்து காணப்படும். சில நேரங்களில் உடல் உறுப்புகளில் மரத்துப் போகும் உணர்வு வரும். பேச்சில் தடுமாற்றம் தெரியும்.பக்கவாத பாதிப்புக்கான முக்கிய காரணங்கள் என்ன?உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிதல், அதிக உடல் எடை, புகை, மது பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சோம்பேறியான வாழ்க்கை முறை, நாள்பட்ட மன அழுத்தம், உடற்பயிற்சி இன்மை போன்றவற்றால், பக்கவாதம் வரலாம்.பக்கவாதம் வந்தால் உடனே செய்ய வேண்டியது?மேற்கூறிய உடல் மாற்றங்கள் தெரிந்தவுடன் மருத்துவமனைக்கு, நான்கரை மணி நேரத்திற்குள் செல்ல வேண்டும். பக்கவாத்திற்கான சிகிச்சைகள் அடங்கிய மருத்துவமனைக்கு சென்றாலே, அதற்கான சிறப்பு சிகிச்சை அளிப்பதன் மூலம், அதை குணப்படுத்தி விடலாம்.பக்கவாதத்திற்கான சிகிச்சைகள் என்னென்ன?பக்கவாதம் தாக்கினால், அதற்கான சிறப்பு மருந்துகளை உடலில் செலுத்துவதன் மூலம், 'த்ராம்பாசிஸ்' பிரச்னைக்கு தீர்வு காணலாம்.மூளைக்கு செல்லும் பெரிய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், மருந்துகள் மூலம் சரி செய்ய முடியுமா?மூளைக்கு செல்லும் பெரிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தால், 'த்ராம்பெக்டமி' எனும் மருத்துவ முறையின் மூலம், தொடையில் உள்ள ஒரு ரத்தக் குழாயில் ஒரு ஒயர் போன்ற அமைப்பை செலுத்துவதன் மூலம் அடைப்பு நீக்கப்படுகிறது. பக்கவாதம் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். புகை, மது பழக்கத்தைக் கைவிட வேண்டும். கொழுப்பு சத்தைக் கட்டுப்படுத்துதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ளுதல் மூலம் பக்கவாதத்தை தடுக்கலாம்.- கே.ஸ்ரீதர்மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர், குளோபல் மருத்துவமனைசென்னை. 98400 58008


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !